நவம்பர் 2022
யார் இந்த நாம் தமிழர்?
உலகில் அதிபயங்கர ஆயுதம் எதுவெனக் கேட்டால் அணு ஆயுதம் எனச் சொல்வார்கள். அதனைவிட பயங்கர ஆயுதம் ஒன்று உண்டென்றால் அது அதிகாரம் என்று தான் சொல்வேன். அதிபயங்கரமான ஆயுதம் அதிகாரம் என்பதில் ஐயமே இல்லை; ஏனெனில் ஆக்கவும் அழிக்கவும் அதிகாரம் தான் இங்கே ஆதாரமாய் உள்ளது.
உண்மை என்பது ஒரு பக்கத்தை வைத்தே இங்கே பல சமயங்களில் தீர்ப்பெழுதி முடித்துக் கொள்ளப்படுகிறது. அதன் மறுபக்கத்தைப் பார்க்க பலர் மறந்து விடுகிறார்கள் அல்லது மறக்கடிக்கப்படுகிறார்கள். அதைச் சிரமம் எடுத்துத் தேடி உண்மையை உரக்கச் சொல்லிவிட ஒரு சிலரே விழைகின்றனர். அதில் இனத்துக்காக இன்னுயிரையும் தந்து தன்னலம் கருதாது பொது நலத்தில் நாட்டம் கொண்டு, இங்கே இனத்தின் இருப்பினைத் தக்க வைக்க, தமிழரின் சமநலம் காத்து நிற்க, மண்ணின் மைந்தர்கனாய், எம் மண்ணினை நாம் ஆண்டிட அதிகாரம் இருந்தும் அகதிகள் போல் அலைந்து திரியும் அன்புத் தமிழர்களுக்காய் அதிகாரத்தை ஆட்கொண்டே தீர்வோம் என்பது எதற்கெனில் நாடெங்கும் நல்ல சிந்தனையை விதைத்து நட்புக்கரம் மட்டுமே நீட்டி நாம் தமிழர் என அரவணைத்துக் காத்து நிற்பவரே நாம் தமிழர்.
காலம் காலமாய் ஏமாந்தது போதுமென வெகுண்டெழுத்து, இல்லை.. வெகுண்டு எழ நேரம் பார்த்து காத்திருக்க பொறுத்தது போதும் என தங்க மகன் ஒருவன் தமிழருக்கான தம்பி வா என என அழைப்பது போலிருந்தது.
நான் அண்மையில் தமிழகத்தில் காணப்பெற்ற காட்சிகள் அதை பின்னொரு நாளில் விளக்கமாக பார்ப்போம் தம்பி வா என தன்மானத்தோடு அழைப்பதை அலட்சியம் செய்யவோ ஆராய்ச்சி செய்யவோ இங்கே யாரும் கணப்பொழுதும் மீதம் வைக்கவில்லை மண்ணைக் காக்க எனும் மகிழ்ச்சியான செய்தியை முதன்முதலாக கட்சியின் அறிவிப்பாய் அறிந்ததில் ஈர்க்கப்பட்டேன்.
வாழும் இந்த அன்னை பூமியை வாழ்வதற்கு மட்டுமே ஆதாரமாய் பார்க்காமல் ஒரு சில தன்னலவாதிகளின் போக்கால் ஊரையே கூறு போட்டு விற்கும் கூட்டத்தினரின் சூழ்ச்சியை உணர்ந்ததாலேயே நாம்.தமிழரின் குரல் மண்ணைக் காக்க என்பதின் உட்பொருள் விளங்கிற்று. ‘ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த’ கதையாய் இங்கே வடநாட்டவரின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாற்று ஒன்றை வேண்டி மனச்சான்றின் படி உளப்பூர்வமாய் என்னை நான் உணர்ந்த தருணமே நான் இங்கே நாம் தமிழராய்!!
திரு. இரா.பார்த்திபன்,
செந்தமிழர் பாசறை – குவைத்.