எங்கள் அண்ணன்
வேல் கொண்டு தாக்கும் எங்கள் அண்ணனின் உரைவீச்சு!
தமிழே எங்கள் அண்ணன் சீமானின் உயிர் மூச்சு!
அன்று இராமேசுவரம் அடையாளம் காட்டியது எங்கள் அண்ணனை!
அதனால் அண்ணன் சீமான் கண்ட சிறைகளும்தான் எத்தனை!
திராவிடம் எங்கள் அண்னான் வருகையால் சிதைந்து போனது!
ஆரியம் எங்கள் அண்ணன் வரவினால் மலையேறிப் போனது!
தமிழ்த்தேசியமே எங்கள் அண்ணன் சீமானின் வழி!
அதைத்தடுத்திட இங்குள்ள சில திராவிடர் நாளும் சதி!
எங்கள் அண்ணன் விழியினிலே ஆயிரம் வலிகள்!
அண்ணன் வழியினிலே நூறாயிரம் இளம்புலிகள்!
தலைவன் பிரபாவைத் தாங்கி நிற்கும் தம்பி இவன்!
மாவீரர் எண்ணங்களை ஏந்தி நிற்கும் எங்கள் அண்ணனிவன்!
செந்தமிழில் எங்கள் அண்ணன் சீமானின் பேச்சிருக்கும்!
செங்கதிர் போல் எங்கள் அண்ணன் உரைவீச்சிருக்கும்!
கொட்டும் மழையிலும் தமிழருக்குப் பாடமெடுக்கும் புரட்சிக்காரன்!
கோபத்திலும் பாசம் காட்டும் நற்குணத்துக்காரன்!
வரிப்புலியாய் எங்கள் அண்ணன் பாய்ச்சலிருக்கும்!
எளியவருக்கும் எங்கள் அண்ணன் பாசம் பிடித்திருக்கும்!
தடம்பதிக்கக் காத்திருக்கும் தலைவனின் தம்பி எங்கள் அண்ணன்!
தம்பிகளுக்குத் தலைமைப் பேராசான்எங்கள் அண்ணன்!
சங்கத்தமிழ் நாட்டினைக் மீண்டும் கட்டமைப்போம்!
அண்ணனுடன் வாருங்கள்! தமிழினம் ஒன்றாக இலக்கை வென்றாக!
எங்கள் அண்ணன் வழியினிலே நாங்கள்!
தமிழரைக் காத்து நிற்கும் காப்பரண் எங்கள் அண்ணன்!
தமிழ்க்குடிகள் தழைத்தோங்க தலைவர்
தந்த கொடை எங்கள் அண்ணன்!
திரு. பா.வேல்கண்ணன்,
துணைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.