டிசம்பர் 2022
மகாகவி பாரதி
முண்டாசுக் கவிதைக்காரன்…
முன்கோபக் குணத்துக்காரன்…!
தமிழ்நாட்டுப் பேச்சுக்காரன்…
தன்மான மூச்சுக்காரன்…!
அச்சமிலா நாட்டுக்காரன்…
அன்புமிகு பாட்டுக்காரன்…!
வஞ்சமிலா பாசக்காரன்…
கொஞ்சுதமிழ் நேசக்காரன்…!
நெருப்புக்கனல் வரிகளிலே…
புரட்சிக்கலகம் செய்வானவன்,
அவனே, எம் மகாகவி !!!
திரு. பாரதிராசன் வல்லவன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.