டிசம்பர் 2022
பண்டைத் தமிழரின் மெய்யியல்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
நம் தமிழ் மண்ணுக்கு, 18 சித்தர்களும், 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் வந்துதித்த பூமி என்ற பெருமை உண்டு. இந்த பெருமக்கள் அருளிய கற்பிதங்களே, தமிழர்களின் மெய்யியலாக நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இப்பெருமக்கள் விட்டுச்சென்ற இலக்கிய படைப்புகளே இதற்கு கட்டியம் கூறுவதாகவும் அமைகிறது. இந்தக் கட்டுரையை சித்தர்கள் வழிபாட்டை மட்டுமே அலசுவதாக அடியேன் அமைத்திருக்கிறேன்.
“நந்தி, அகத்தியர், மூலா, புண்ணாக்கீசர், நற்றவத்துப் புலத்தியரும், பூனைக்கண்ணர், நந்தி இடைக்காடர், போகா, புலிக்கையீசர், கருவூரார், கொங்களாவர், காலாங்கி, நந்தி எழுகண்ணர், அகப்பேயர், பாம்பாட்டி, தேரையகும் குதம்பையரும், சட்டைநாதர் செந்தமிழ்சேர் சித்தா பதினெண்மர் பாதம் சிந்தையுண்ணிச் சிரத்தவணியாய் சேர்த்தி வாழ்வாம்” எனும் இப்பாடல் 18 சித்தர்களை வரிசைப்படுத்துவதாக இருக்கிறது.
சித்தர்கள் என்பவர்கள் யாவர்? எனும் கேள்விக்கு சித்தர் எனும் பதத்தை நாம், சித்+அர் என்று பிரித்து எழுதிக் கொள்ளலாம். இதில், ‘சித்’ எனும் பதம் சித்தம் என்ற பதத்தில் சுருக்கமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். இது மனம், அகம், உள்ளம், உயிர் ஆகிய அருஞ் சொற்பொருடகளையும் தாங்கி நிற்பதை நாம் அறிவுறோம். மேலும், ‘அர்’ எனும் பதம் அறிந்தவர்கள் என்ற பொருளையும் தருகிறது. அதாவது சித்தம் அதன் அடித்தளத்தில் உயிர், அந்த உயிரின் அடித்தளத்தில் அறிவாசிய சிவம் இருப்பதால், சித்தர் எனும் பதத்திற்கு, அறிவாகிய மெய்ப்பொருளை, சிவனை தங்களுடைய நல்லறிவால் அறிந்து கொண்டவர்கள் என்று பொருள்படுகிறது. இப்பெருமக்கள் ஓகம், மருத்துவம், அறிவியல், தொழிலநுட்பம், கணிதம், வானியல் இப்படி பல துறைகளிலும் விற்பன்னர்களாக வாழ்ந்து வந்தவர்கள் ஆவார்கள்.
“அண்டத்தில் எதுவோ? அதுவே பிண்டத்திலும்!”எனும் சித்தர் பாடலில், அண்டம், பரமாணு (Atom) முதற்கொண்டு ஐம்பெரும் ஆற்றல்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்), பெரு வெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory) மற்றும் ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைச் சுருங்கக் கூறியிருக்கின்றார்கள்.
இவர்களில் பெகும்பாலாளோர் மக்களோடு மக்களாக வாழாமல், தங்களைத் தாரிமைப்படுத்திக் கொண்டு பாழி களிலும், மலைக்காடுகளிலும் வாழ்ந்து வந்தவர்கள் ஆவார்கள். இப்பெருமக்கள் ஓகம், இன்றைய அறிவியலாளர்களையே வியக்க வைக்கும் தொழில்நுட்பம், கணிதம், வானியல் இப்படி பல துறைகளில் விற்பன்னர்களாக வாழ்ந்ததை இப்பெருமக்கள் விட்டுச் சென்ற இலக்கிய படைப்புகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நம் தமிழ் சமுதாயம் ஐம்பெரும் திணை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) நிலங்களில் வாழ்ந்து வந்தபோது, மக்களின் வாழ்வியல் சார்ந்த உடல்நலம் சார்ந்த குடும்ப நலம் சார்ந்த சிக்கல்களுக்கு, இப்பெருமக்களை, அவர்களின் வசிப்பிடத்தில் சென்று சந்தித்து ஆலோசனை பெற்று நலமோடும் வளமோடும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் உண்மையும், உள்ளத் தூய்மையுமாக இருந்ததனால் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர்களாகவும், போற்றுதற்கு உரியவர்களாகவும் திகழ்ந்து வந்தார்கள்.
இப்பெருமக்களுக்கு மக்களிடம் பொய்மை பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால், இவர்கள் மண, பெண், பொன் ஆகிய மூவாசைகளை துறந்தவர்கள் ஆவார்கள். இப்பெருமக்கள் தங்களை வணங்குங்கள் என்று மக்களிடம் ஒருபோதும் கூறியதில்லை. மாறாக, நாம் அனைவரும், உருவமற்ற சிவனை வானங்குபவர்களாகவே வாழ வேண்டும் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களைத் துடைத்தெறிந்தவர்களாவார்கள். இதை நாம் அப்பெருமக்களின் படைப்பிலக்கியங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
உதாரணமாக, “தாவாரம் இல்லை தனக்கொரு வீடில்லை… தேவாரம் எதுக்கடி குதம்பாய்! தேவாரம் எதுக்கடி??” என்று குதம்பைச் சித்தர் பாடுகிறார். இதில் அவர், உருவ வழிபாட்டைச் சாடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இந்தப் பெருமக்களின் உருவமற்ற இறை வழிபாட்டுச் சித்தாந்தம் மக்களிடையே புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆகையால், மக்களுக்கு உருவ வழிபாடு கற்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதுதான், பின்னாளில் சந்திரன், பாம்பு, புலித்தோல் உடுக்கை, கங்கை, முச்சூலம் போன்ற குறியீடுகளை அமைத்ததோடு, அகண்டத்தில் சிவம் (Statics) அதாவது இருப்பு, அண்டத்தில் சக்தி (Dynamics) அதாவது இயக்கம் என்றும் ஒட்டுமொத்தமாக Metaphysics, அதாவது இறை இயற்பியல் என்று பலவாறாகவும் சிவனுக்கு உருவம் கற்பித்து சில சடங்கு முறைகளை வைத்து வழிபாட்டு முறைகள் தோன்றின.
இன்றளவிலும், இப்பெருமக்களின் உயிர் அடங்கிய தலங்களில் தான் சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருகின்றன என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
இப்பெருமக்கள் காட்டிய வழியைப் பின்பற்றி நாம் வாழ்ந்து வருவோமேயானால், வாழ்வியலில் தாம் தேர்படக்கூடிய பல சிக்கல்களுக்கு, பிறர் உதவியை நாடாமல், நமக்கு நாமே தீர்த்துக் கொள்ளக்கூடிய ஞானம் நம்முள் மலரும். பிறகு கவலையின்றி சினம் தவிர்த்து நம்மால் வாழ இயலும். இல்லையெனில், ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று வாழ தேரிடும்.
இறுதியாக இப்படி 18 சித்தர்களும், 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் உதித்து, உலகினுக்கு (‘ஓம்’ எனும் பதம், Caduceus எனும் மருத்துவ உலகத்தினரின் குறியீடு, குண்டலினி ஓகம் போன்றவை தமிழ் மொழி உலகிலுக்களித்த கொடை) மெய்யியல் போதித்த, தமிழர் மண்னில், ஐம்பெருங் குற்றங்கள் (பொய், களவு, கொலை, கற்பழிப்பு, சூது) மலிந்து கிடப்பதை நாம் கண்கூடாக காவாக்கூடியது. விந்தையிலும் வித்தை. இதுவரை நம்மை ஆண்ட அரசுகள் இந்த பெருமக்களின் படைப்பிலக்கியங்களை நம்மிடம் வளர்த்தெடுக்கத் தவறிவிட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் அறிஞர்களும், இந்த பயணத்தில் தங்கள் கடமையை ஆற்றத் தவறி விட்டார்களோ?? என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது!
இனிவரும் நாம் தமிழா ஆட்சியில் இந்தக் குறைபாடுகள்களையப்பட்டு, நம் தமிழர் மண் ஒரு அறம் சார்ந்த பூமியாக மாற்றியமைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
திரு. இரா.சாந்தகுமார்,
ஆன்றோர் அவையப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.