டிசம்பர் 2022
உடல் ஆரோக்கியமும் மன வலிமையும்
நம் முன்னோர்கள் பல்வேறு வாழ்க்கை நெறிமுறைகளை முறையாக வகுத்து வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குழலுக்கு ஏற்றவாறு, தேவையை மாற்றியமைத்து, இயற்கையோடு ஒன்றி ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வழிமுறைகளைப் பின்பற்றி வந்தனர். குறிப்பாக உணவுக் கவாச்சாரம், வாழ்கையின் இன்றியமையாத அங்கமாக இருந்தது. உளணவு என்பது ஒவ்வொரு மனிதனின் உடல் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அன்றைய காலம் அனைவரும் உழைப்பை ஒரு பணியாகவே கருதி காலையில் இருந்து மாலை வரை கடினமாக உழைத்து உடல் மற்றும் மனவலிமையைப் பெற்றிருந்தனர். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உறுதியுடன் எதிர்கொண்டு வாழ்ந்தனர். அதற்குக் காரணம் அவர்கள் தற்சார்பு முறையை சிறப்பாகக் கையாண்டனர். அதனால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வாழ்வின் நெறிமுறைகளை வகுத்து வாழ்ந்து வந்தனர்!
அக்காலப் பொழுதுபோக்கு
நாம் அறிந்த காலத்தில் அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், பள்ளிப்பருவம் என்பது சுகமாக இருந்தது. கற்கும் முறையும் இலகுவாக இருந்தது. அன்று படிப்பை விட விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். இன்று போல் அன்று கிடையாது: ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசியும் சிரித்தும் சண்டையிட்டும் வாழ்ந்த காலம் இன்றளவும் நினைவில் உள்ளது. மாலை இரவு உணவை முடித்துவிட்டு கிராமத்தில் உள்ள பெரியவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அமர்ந்தால் அவர்கள் கூறும் கதைகள் கற்பனைக்கதைகளாக இருந்தாலும் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கும். அதில் அறிவியலும் மறைந்திருக்கும். படங்களில் பார்ப்பது போல், அடுத்து என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். அந்தக் கதைகளில் எதார்த்தம் இருக்கும். அதன் அருகில் ஒரு கூட்டம், அதாவது பள்ளிப்பருவப் பிள்ளைகள் தூசி பறக்க மண்ணில் ஓடி ஆடி விளையாடும் போது அருகில் இருக்கும் பெரியவர்கள் சத்கும் போடுவதும், கண்டிப்பதும், திட்டுவதும் கூட ஒரு சுகம் தான். அவர்களை எள்ளிநகையாடுவது, அதற்கு அவர்கள் ஒருமையில் திட்டுவது போன்ற நிகழ்வுகள் இன்று கண்முன்னே வந்து செல்கின்றன. அதேபோல் அன்று யாராக இருந்தாலும் பெரியவர்கள் என்றால் மதிப்பும் மரியாதையும் இருக்கும். யார் வீட்டுப் பிள்ளைகள் தவறுகள் செய்தாலும் கண்டிப்பார்கள். அவர்களை கண்டால் நாமும் பயத்து நடப்போம். தவறுகள் செய்வற்கு பயம் இருந்தது அவை நம்மை ஒழுக்கத்துடன் வாழவும் வழிவகை செய்தன. ஆனால் இன்றோ முற்றிலும் எதிர்மறை எண்ணங்கள் சூழ யாருடைய பேச்சுக்கும் மரியாதை கொடுப்பதும் இல்லை: பெரியவர்களை மதிப்பதும் இல்லை. ஒரே வார்த்தையில் உங்களுக்கு என்ன தெரியும்? என்ற ஏளனம் செய்து உதாசினப்படுத்துவது போன்ற சொற்கள் இன்றைய தலைமுறையின் நாகரிக வளர்ச்சி என்ற மமதையை எடுத்துக் காட்டுகின்றன.
முன்னோர் உழவு வழிமுறைகள்
தாம் சிறுவயதாக இருக்கும்போது எவ்வாறு உழவுத் தொழிலை நமது கிராமங்களில் கையாண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மாட்டு எகு. ஆட்டு எரு, இலை தழையைக் கொண்டு இயற்கையான முறையில் விவசாயம் செய்தோம். அந்த உணவை உட்கொண்டதன் மூலம் எந்த ஒரு உடல் சம்பந்தமான பிரச்சனைகளும் மனிதனை நெருங்க வில்லை. கல்வியறிவு மூலம் கால ஓட்டத்தில் வளர்ச்சி என்ற பெயரில் நாசம் செய்யும் தொழில்நுட்பங்களைப் புகுத்தியபோதுதான் அனைத்துவிதமான பிரச்சனைகளும் உருவெடுக்கத் தொடங்கின. நாம் தற்சார்புப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தபோது அனைத்தும் சரியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அதாவது 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான், வெடிக்காத வெடிமருந்துகள் அனைத்தையும் இரசாயன உரங்களாக மாற்றம் செய்து தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய நாடான இந்தியாவில், இவற்றை விற்பனை செய்யலாம் என்று ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்தன. அவற்றை மக்களிடம் நேரடியாகக் கொண்டுவர இயலாது என்பதால் அரசியல் அமைப்புக்கள் மூலம் இவற்றை இந்தியாவில் நடைமுறைபடுத்த முடிவு செய்து, ஆறுமாதம் நடைபெற்ற சாகுபடியை விட்டு மூன்று மாதத்தில் நெல் அறுவடை செய்யலாம் என்ற உத்தியை மக்களிடம் பரப்பி அனைத்துவிதமான இரசாயன் உரங்களும் நமது நாட்டில் வணிகம் மூலம் திணிக்கப்பட்டது. பிறகுதான் அனைத்து விதமான நோய்களும் இந்நிலத்தில் பரவ ஆரம்பித்தன!
வர்த்தக மயமாக்கப்பட்ட உணவும் விவசாயமும்:
வாழ்வில் உணவை ஒரு அங்கமாய் வைத்திருந்த, உணவே மருந்து என்சிற கோட்பாட்டில் இருந்த நமது தமிழரின் உழவுசார் உற்பத்தி வாழ்வியலை அழிக்கத் திட்டமிடப்பட்டது. விளைவு நமது நாட்டுமாட்டு இனங்களை அழிக்க அந்திய முதலாளிகளின் மூலம் சதி செய்யப்பட்டது. அவர்கள், நாட்டு மாடுகளை அழித்தால் தான் இரசாயன் உரங்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். உழவு இயந்திரங்களின் தயாரிப்பும், அவை அறிமுகம் செய்யப்பட்டதும் அச்சமயம் தான் என்பதால், அவர்களின் வெற்றியும் ஆரம்பமானது. நாட்டுமாடுகளை அதிக விலைகொடுத்து வாங்கி அழிக்க ஆரம்பித்தார்கள். அவற்றை அழிப்பதன் மூலம் இரண்டு ஆதாயங்களை அடைந்தார்கள். ஒன்று இரசாயன் உம் விற்பனை: மற்றொன்று உழவு இயந்திரப் பயன்பாடு. இவை இரண்டையும் மிகப்பெரிய வணிகமாக மாற்றி வெற்றியும் அடைந்தார்கள். நமது இந்திய அரசும் இதன் சூழ்ச்சி அறியாமல் தரகுத்தொகையை வாங்கிக்கொண்டு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது!
பாலின் மூலம் வர்த்தகம்:
நமது நாட்டுமாட்டின் பால் தாய்ப்பாலுக்கு இணையானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இன்றோ பத்து விட்டா, பதினைந்து லிட்டர் பால் கறக்கும் சீமைப் பசு மாடு எனும் கலப்பினங்கள் தான் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் பாலை அருந்துவதால் ஏற்படும் இன்னல்கள் அதிகம். இவற்றின் பால் ஏ 1 ரகத்தை சேர்ந்தவை. இந்தப் பாலைக் குடிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செரிமானக் கோளாறு, ஒவ்வாமை போன்ற சிக்கல்களினால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதைப் பயன்படுத்தி அதிகமான ஊசி மருந்துகள் வியாபாரம் செய்யப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் கிடையாது. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிய வேண்டுமானால், ஜான் பெரிக்கின்சு எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” என்ற புத்தகத்தைப் படித்தால் தெரியவரும். இதற்கு முக்கிய காரணமே அரசியல் கட்சிகள் தான். மக்கள் விழிப்புணர்வு அடைந்து, தங்களது அரசியல் உரிமைகளைச் சரியான முறையில் பயன்படுத்தி, நல்ல கருத்தியலைப் பின் தொடர்ந்து வாக்குச் செலுத்தி, நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும!
திரு. தர்மர் பொன்னையா
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – கத்தார்.