spot_img

தை ஒன்றே தமிழ்ப்புத்தாண்டு!

டிசம்பர் 2022

தை ஒன்றே தமிழ்ப்புத்தாண்டு!

ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தளது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் கட்டாயமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும், மொழியையும், வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளையும், அதன் நிலைத்தன்மையையும், அவ்வினத்தின் வாழ்வாதாரத்தையும் சுட்டிக் காக்கும் காரணியாகின்றது.

அந்த வகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலைபெறும் தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தின் எச்சங்கள் பல்வேறு திசைகளில் ஆசிய, ஆப்பிரிக்க, ஆவுஸ்திரேலிய கண்டங்களுடன் இணைந்த நாடுகளாக, நிலப்பரப்புகளாக சிதறிக் கிடக்கின்றன.

குமரிக் கண்டத்தின் தாய் நிலமாக, வடக்கே மேரு மலை (இமயம்) வரை சிந்து சமவெளிக்கப்பாலும் பரவி வாழ்ந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம், அகப்பகையாலும், இனத்துரோகத்தாலும், வந்தாரை வாழவிட்டதோடல்லாமல் ஆளவும் விட்டதால் இன்று இந்திய ஒன்றியத்தில் அரசியல் வலிமையற்று ஒதுக்கப்படும் மாநிலமாகவும், இலங்கையில் ஒடுக்கப்படும் இனமாகவும் சுருங்கிவிட்டது தமிழினம். இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவும், மீண்டெழவும் தனது மெய்யியல், வரவாறு. பண்பாட்டுக் கூறுகளை கட்டிக்காப்பது தேவையாக இருக்கிறது.

இந்நிலையில் உலகின் மூத்த இளம், மொழியில், கலை, பண்பாடு, அறிவியல், வானியல், மருத்துவம் என பரந்த அறிவுச் சமூகம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்து தொல்காப்பியம், திருக்குறள் என இலக்கணம், இலக்கியம், அறம், அறிவு, வீரம் சார்ந்து வளர்ந்த இலம் இன்று தமக்கான புத்தாண்டைக் கொண்டாடத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. வந்தவர் போனவரெல்லாம் தமிழரின் புத்தாண்டை சித்திரை, தை எனப் பந்தாடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

முதலில் தமிழர்களிடம் ஆண்டு என்றொரு காலக்கணிப்பு முறை இருந்ததா எனப் பார்ப்போம். ‘யாண்டு என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம்.

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.” (குறன் 4)

இப்போது காவத்தைத் தெளிவாகக் குறிக்கும் யாண்டு என்ற சொல் இடம்பெற்ற சங்ககாலப் பாடலைப் பார்ப்போம்.

‘பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன

நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போவப்’ (குறு:57:1}

இப்பாடலில் ‘யாண்டு கழிந்தன்ன’ என்பது ‘அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற என்ற பொருளில் இடம்பெறுகின்றது. ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்க காலத் தமிழர்கள் அழைத்துள்ளனர் என்பதுதான் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழர்களுக்கு என ஒரு ஆண்டுக் கணிப்பு இருந்திருந்திருப்பின், அந்த ஆண்டிற்கு ஒரு தொடக்கமும் இருந்திருக்கும். ஆனால், அதற்கான சான்றுகள் உறுதியாக இல்லை. எனினும், முதன்மையானதை முன்னிலைப்படுத்தும் வகையில், வரலாற்றில் தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் செந்தமிழ் முரசு

பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை). “தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80), “தைஇத திங்கள் தண்ணிய தரினும்’ (குறுந்தொகை 196) என்பன உட்படப் பல சங்க காலப்பாடல்கள் தையினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

தை என்ற சொல்லிற்குச் சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு ‘தை’ என்பது இரண்டு ஆண்டுகளை இணைக்கின்றது. இவ்விரு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டே தை மாதமே ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கும் என உய்த்தறியலாம்.

இதனைவிட, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள இயற்கை சார்ந்த இரு காரணங்களும் உண்டு. செல்வ வளம்பொருந்திய அறுவடைக் காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாக இருந்திருக்க ميسوري தை மாதத்தின் தல்லமை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலிலே சுட்டெரிக்கும் காலப்பகுதி பொருத்தமானதாகக் காணப்படமாட்டாது.)

மேலும் எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” “தீர்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகராசன் பொங்கல் வரவேண்டும்” என்பன போன்ற சொலவடைகளும் தை மாதத்தின் முதன்மையினைக் காட்டுகின்றன.

அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சில நுற்றாண்டுகளுக்கு முன்னர் வரை தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதனைக் காட்டுகின்றது.

இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பிரபல முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். கனிஷகன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பிளனா தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியாஸ் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ, அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வசையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்லமெல்ல நடைமுறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும், இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் அருவருக்கத் தக்கதாக இந்த அறுபது ஆண்டுகளும் குறிப்பிடப்படுகின்றது.

அறுபது ஆண்டுகளுக்கு பின் சுழற்சியாக தொடக்க ஆண்டே வருவதால் அறுபதுக்கு மேலான காலக்கணக்கீட்டில் பெரும் குளறுபடி ஏற்படும் என்பது தெளிவு.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழா இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர் கோண்டிரடோஸ். எஸ்.ஜி. வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேசி வாழ்வியல் கூறுகளுக்கும், ஆண்டுக்கணிப்பீடுகளைத் தொடக்கமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் எனக் கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த இனத்தினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறும்பேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்வாக் கணிதங்களிலும் முன்னோடியானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள், வானியலில் அரும் பெரும் அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவாகன் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

பண்டைத் தமிழன் இயற்கையை வாங்கி வந்தவன். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை’ இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன் ஆண்டு, யாண்டு என்றும் அழைத்தான் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார். பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.

ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாக அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை காலை நண்பகல் ஏற்பாடு மாலை சாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள். அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று பண்டைக் காலத்தில் கணக்கிட்டனர், தமிழர்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். அதாவது பண்டை காலத் தமிழாகளது செந்தமிழ் முரசு

நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடா 1440 நிமிடங்களோடு அதாவது 24 மணித்தியாலங்களோடு அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாடபொழுதை தற்போதைய நவீன காலத்தையும்விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த mweneur (calendrier / calendar) e ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து ‘ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? ‘horos’. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல , horoscope, horodateur, hour, heure, year…’ இச்சொல்லே வேர்ச் சொல். இந்த ‘horos’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘boundary, limit border’ என்று பொருள். இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை. இந்த ஒரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் ‘horos’,

வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் ‘இராசி’ என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஒரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ஒரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர்.

ஞாயிறு எந்த ஒரையில் தங்குகிறதோ, அந்த ஒரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்திற்கு)ப் பெயராய இட்டனர் தமிழா. கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின்பற்றவில்லை. எனவே, தமிழாகளாகிய நாம் நம் திங்கள்களுக்குச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும்.

வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர், தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனா. கிழமை என்ற சொல்லுக்கு ‘உரிமை’ என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்று. ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை. மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி மாதத்தில் 14 அல்லதுமி தேதிகளில்) தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு தம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான்.

இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இள மக்கள் தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள் தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர்.

ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை தமிழ் நிலத்தில் பாலை என்பதொன்று தனியாக இருந்ததில்லை. குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் புல் பூண்டு, செடி, கொடி இன்றி காய்ந்து பாலை நிலமாக மாறிவிடும். இது சித்திரையின் போதுதான் நிகழும். எனவே இத்தகைய வருந்தத்தக்க காலநிலையை புத்தாண்டாக கொண்டாடியிருக்க முடியாது.

தை மாதத் தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாகக் காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல் என ஆரவாரம் செய்தல், பொங்கலைப் பரிமாறி உண்ணல், புத்தாடை அளரிதல், முன்னோர்க்குப் படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றது.

எனினும், இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போயக் கிடக்கின்றான் தமிழன்.”

ஆரிய ஆண்டு முறையை (சித்திரை) பின்பற்றுபவர்கள் கூறும் காரணப்படி பார்த்தாலும் யாரும் ஒரு தொடக்கத்தை உச்சியில் தொடங்குவதில்லை. ஒரு நாள் பொழுது செந்தமிழ் முரசு

தொடங்கும் பொழுது ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது தொடக்குவதில்லை. மாறாக ஒரு தான நள்ளிரவில் தொடங்கி சிறிது சிறிதாக விடியத்துவங்கி அரை நாள் முடியும் பொழுது ஞாயிறு உச்சிக்கு வருகின்றது. மீண்டும் ஞாயிறு சிறிது சிறிதாக மறையத் துவங்கி நள்ளிரவில் அந்த நாள் முடிவடைகின்றது. அது போலவே ஆண்டும் ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவங்குவதில்லை. உலகில் எந்த இனமும் கொடும் கோடை காலத்தில் தங்கள் ஆண்டினை துவங்குவதில்லை. ஆரிய மாயையில் சிக்குண்ட தமிழரிடையே சித்திரை தான் புத்தாண்டு என்று ஏமாற்றி திவளிக்கப்பட்டுள்ளது.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் “புதுநாள்” என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போசி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு போதல் என்பதாகும். ஓர் ஆண்டைப் போக்கியது போகியது போகி) பொங்கல் என்பது பொங்குதல் ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி பொங்கல் என ஆகுபெயர் ஆசியுள்ளது.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் கால சட்டமாகவும் அமைந்தது. ஒரு இலத்தின் அடையாளம் மற்றொரு இனத்தின் அபார வளர்ச்சியினால் அழிக்கப்படும் என்ற தத்துவக் கோட்பாட்டுக்கு அமைவாகவோ என்னவோ, பின்னாளில் வந்த இளங்களின் நாகரீக ஆளுகைக்கு அடிமையாசிய தமிழரினம் தனது வாழ்வியலின் கணிப்பீட்டு நாளை புறம் தள்ளி, மாற்றார் கணிப்பீடுகளை தனது அடையாளமாக மாற்றிக் கொண்டதன் விளைவாக தமிழர் புத்தாண்டு புறம்தள்ளப்பட்டது. எனினும், காலச்சுழற்சியின் வேகத்துக்குள் தன்னினக் கருவைச் சுமக்கும் இலம் தனக்கான தொன்மை மிக்க அடையாளங்களையும் நிலை நாட்ட முற்படுதல் அவசியமாகின்றது.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டம் வரையறை செய்கின்றது.

வலிந்து திவரிக்கப்பட்ட இந்த ஆரிய 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்து மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.

2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.

3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை, இறுதி மாதம் மார்கழி.

புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், அந்தாளுக்கான கிழமைகள் வழக்கில உள்ளவை. இந்த முடிவை எடுத்தவாகளில் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, த.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம சுந்தர பாரதியார், சி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அதன்பின் 1937 டிசம்பர் 26 இல் திருச்சியில் அசில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியா கா சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பிடி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பல தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழா திருநாள் என்றும் பறைசாற்றியது. தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

இந்த முடிவுகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டன் என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் சி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்” என்று விளக்கம் தந்தார்.

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ஈழத்து அறிஞர் பண்டிதர் க.பொ. இரத்தினம் அவர்கள் ‘சித்திரை வருடப் பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப் பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகள் ஒருவனுடன் இணைந்த தொடா ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம்) தமிழினத்தின் பழமையையும் பண்பையும் சிறப்பையும் செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக் கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும் தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன” என மிகக் கடுமையாக விமாசித்து இருக்கிறார்.

கோவில்களில் ஒதுக்கப்படும் தமிழின, தமிழரின் பொங்கல் திருநாள்தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா செந்தமிழ் முரசு

அல்ல! எந்த வடநாட்டு இந்துவும் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில்லை. ஆரியம் எங்கெல்லாம் நுழைகிறதோ அங்கெல்லாம் அங்கிருப்பதை (தமிழர் மெய்யியல், இறைவழிபாடு, இலக்கண, இலக்கியங்கள், வானவியல், மருத்துவம், கலை என) தன்வயப்படுத்திக்கொள்ளும். ஆனால், எத்தனை வயப்படுத்தினாலும், வலிந்து திணித்தாலும் தமிழ் தமிழர், தமிழினம் என்பது தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாது தனித்த அடையாளத்துடனே இருக்கிறது, இருக்கும்.

வடவிந்திய மொழிகளின் வளங்களை சுரண்டி தனதாக்கிக் கொண்டு, அம் மொழிகளை அழித்த இந்தி என்றுமே தமிழருக்கு எட்டிக்காயே.

தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகனை, சுப்ரமணியன் என திரித்து உள்வாங்கிக் கொண்டாலும், வடக்கில் எங்குமே போற்றப்படுவதில்லை. தமிழர்கள் மட்டுமே எங்கெல்லாம் வாழ்கிறோமோ அங்கெல்லாம் கோவில்களாகவும், வழிபாடாகவும், பத்துமலைகளாகவும், தமிழகத்திலும் ஆறு படையாகவும், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனாகவும் போற்றி வருகின்றோம்.

உண்மையில் பொங்கல் திருநாள் சமய சார்பற்ற இயற்கை சார்ந்த எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத திருநாடகளையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட “கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான நமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.!

தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

1935ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மாநாடு என்ற பெயரில் ஒரு மாதாடு நடைபெற்றது. பசுமலையில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழ்வேள், பி.டி. இராசன், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், புலவர் காப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது! எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? இது தமிழர்களின் விழா என்று முழங்கினார். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.

ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற்கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல் நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பததைக் கொண்டாடும் தான்!

தமிழினம் தலை நிமிர வேண்டும், தமிழர்கள் அனைவரும் உய்ய வேண்டும் என தொவைநோக்கும், தெளிந்த சிந்தனையும், வரலாற்றை வழிகாட்டியாக கொண்ட தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழத்தில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துக் கொண்டாடச் செய்தார்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம், கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

எனும் பாவேந்தரின் பாடல் வரிகளுக்கேற்ப ஆரிய மாயையையும், அதற்கேற்ப ஆடும் திராவிடத் தீமைகளையும் விலக்கி, தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை உறுதியாகக் கொண்டு, இனி ஒரு விதி செய்வோம் அதனை எந்நாளும் காப்போம்

“திருவள்ளுவர் ஆண்டே இனி நம் ஆண்டு! தைத்திங்கள் முதல் நாளே நமக்குப் புத்தாண்டின் முதல் தாள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் தமிழர் நம்பிக்கைக்கு ஏற்ப 2054 திருவள்ளுவராண்டு, தை முதல்நாள் வரும் தமிழ்ப்புத்தாண்டில் உலகம் முழுவதும் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.

திரு. .இராமகிருசுணன்,

ஆன்றோர் பேரவைத் தலைவர்,

செந்தமிழர் பாறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles