ஏப்ரல் 2023
தமிழ்த்தேசியத்தின் விடுதலை
“தலைவர்களை ஒருபோதும் திரையில் தேடாதே; தரையில் தேடு” என்று அண்ணன் சீமான் உட்பட பலர் பேசிவிட்டனர். ஆயினும் நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அன்றிலிருந்து இன்றுவரை அதாவது அன்று எம்.ஜி.ஆர் தொடங்கி இன்று கமல் போன்றோர் வரை திரைப்பட நடிகர்களின் தாக்கம் என்பது தமிழக அரசியலில் சற்று அதிகம்தான். நாடு குடியரசு ஆன போது, தமிழ்நாட்டில் காங்கிரசின் கை மட்டுமே ஓங்கியிருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த எந்த காங்கிரஸ் தலைவரும் தமிழ் மொழிக்கோ, தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளுக்கோ முக்கியத்துவம் ஏதும் கொடுக்கவில்லை. மாறாக இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியைத் திணிக்கும் திட்டத்தை முதன்மையாகக் கொண்டிருந்தனர்.
அன்றைய காங்கிரசார் நடத்திய இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள், தமிழ்நாட்டில் பலராலும் முன்னெடுக்கப்பட்டன; அதைக் கச்சிதமாக பயன்படுத்திக கொண்ட திராவிடவாதிகள், தங்களை அப்போராட்டங்களில் முன் நிற்பதாகக் கட்டமைத்துக் கொண்டனர். அத்தகைய சேயல்களின் மூலம் தங்களைக் காங்கிரசிற்குப் பிரதான எதிர்க்கட்சியாகக் காண்பித்துக் கொண்டனர். பின்னர் தமிழ், தமிழர் நலன், முற்போக்கு சிந்தனை என பேசிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு பேற, அப்படியே தமிழ் சார்ந்து தமிழர் நலன் சார்ந்து பேசுவோர்களையும், முற்போக்கு சிந்தனை உடையோர்களையும் திராவிடம் என்ற போர்வையில் ஒளித்து, தமிழர் என்ற எழுச்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். பல திராவிட இயக்கங்களின் மூலம், மீனுக்கு தூண்டிலில் இட்ட மண்புழு போல தமிழின் பெயரை வைத்தே தமிழ் இலக்கியம் மற்றும் கலைத்திறன் கொண்ட தமிழர்களை தன்பக்கம் இழுத்து திராவிடர் என்ற சூழ்ச்சி வலைக்குள் அடைத்தனர்.
திராவிடம் தான் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்பது போன்றொரு போலிக் கட்டமைப்பை உண்டாக்கி, தமிழும் திராவிடமும் வெவ்வேறல்ல என்று நம்பவைத்தனர். எம்.ஜி.ஆர் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டி பறந்த காலம், அதை திறம்பட பயன்படுத்திக் கொண்ட திராவிடவாதிகள் திரைப்பட வசனம் பாடல் என முழுக்க முழுக்க திராவிடம் திராவிடர் என்று பேசிப்பேசி திரைப்படங்களையே தங்களுக்கான சிறந்த ஊடகமாக பயன்படுத்திக் கொண்டனர், இதில் கசப்பான உண்மை என்னவென்றால் அதற்கு உதவியவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. திரைப்படங்களின் மூலம் மக்களைக் கவரும் உத்தியானது மிக நன்றாகவே வேலை செய்தது. அதன் மூலம் மாபெரும் எழுச்சி பெற்ற திராவிடர்கள் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றியதும், திராவிடத்திற்கு எதிராக அவர்களது முகத்திரையை கிழித்து தமிழ்த் தேசியம் பேரியவர்களை வெளியில் தெரியாமல் முடக்கினர். அவர்களை விடுத்து தமிழ் சார்ந்த அரசியல் பேசி வேறு தலைவர்கள் உருவாவதை அவர்கள் விரும்பவில்லை.
ஊடகங்கள் திரைத்துறை என நேரடியாக மக்களைச் சென்று சேரும் அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில் அடங்கியது. அறிந்தோ அறியாமலே பல தமிழ் அறிஞர்கள் அவர்களுக்காக வேலை பார்க்க, தாங்கள் ஏமாறுகிறோம் என்றே தெரியாமல் தமிழ் மிக்கள் திராவீடர்களாக மாற்றப்பட்டனர். இது இன்று வரை தொடரும் அவலம் தான். இதில் அவர்களது இன்னொரு சதித்திட்டம் என்னவென்றால் புதிய எதிரியை வரவிடாமல் செய்ய ஒரு திராவிட கட்சிக்கு எதிராக இன்னொரு திராவிட கட்சியையே நிறுவியது தாள். அதன் பின் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தேசியக் கட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டும், தமிழர் ஒற்றுமையைக் கலைக்க பல சாதியக் கட்சிகளை ஆதரித்தும் வந்தனர். திரைப்படங்களில் கூட தமிழ் சார்ந்த கருத்துக்கள் வந்தாலும் திராவிடம் என்ற போர்வையிலேயே அமைந்தது.

இன்று வரை நிலை அப்படித்தானிருக்க, இன்றைய நாம் தமிழர் கட்சியின் எழுச்சி மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி மூலமாகத்தான் அவர்களது முகத்திரை மெல்ல மெல்ல அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது. இருந்தும் கூட இன்றளவும் அதிகாரம் அவர்கள் கைகளில் இருப்பதால் அவர்களுக்கெதிராகத் திரையில் பேச முடியாமல் தான் இருந்து வந்தது.
ஆனால் அதற்கெல்லாம் விடுதலை கொடுக்கும் விதமாக வரலாற்றில் முதன்முறையாக திராவிடர்களைப் பயன்படுத்திக்கொண்டு மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றையும் தமிழ்த் தேசிய கருத்துக்களையும் சார்ந்து வந்துள்ள படம் தான், விடுதலை. கடத்த சில நாட்களாக திராவிடர்களைத் தூங்கவிடாமல் செய்த படம் விடுதலை.
காலம் நமக்களித்த மிகச் சிறந்த வாய்ப்பு, இப்பா த்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி எளிய மக்களிடத்தும் கொண்டு சேர்ப்பதுதான். இப்படத்தை சாதாரண திரைப்படமாகக் கடந்து விட இயலாது. பல ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் கோலொச்சி வந்த திராவிட முகத்திரையை விடுத்து, தமிழ்த் தேசியக் கொள்கையை ஏந்தி வந்திருக்கும் இம்மாபெரும் காவியம், சமீப நாட்களாக பெரிய பேசுபொருளாக இருக்கும் இத்திரைப்படம், பல புதிய தமிழ்த் தேசியப் படைப்பாளிகவை உருவாக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. மேலும் பல தமிழ் படைப்பாளிகளுக்குப் புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இன்று தமிழ்த் திரையுலகில் வேற்றிமாறன் விதைத்திருக்கும் இந்த விடுதலை என்னும் விதை, திரையுலகில் மட்டுமல்லாது தரை உலகிலும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான விதை என்றே நாம் பார்ச்ச வேண்டியுள்ளது. இதை மரமாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ்ப் படைப்பாளியின் கடமையாகும்.
திரைப்படங்களை மக்களிடம் நம் கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் கருவியாக, நமக்கான ஓர் ஊடகமாக நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே இவ்விடுதலையைக் கொண்டாடி கோண்டு சேர்ப்போம் மக்களிடம்.
திரு. காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஒமன்.