ஏப்ரல் 2023
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாறுமா காவிரிப்படுகைப் பகுதி?
தமிழ்நாட்டில் நாசக்காரத் திட்டங்கள் அனைத்தும் இதுவரை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் அனுமதியோடும் துணையோடும்தான் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம், திமுக அமைச்சராக இருந்த டி ஆர் பாலு தலைமையில் அன்றைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலினின் அனுமதியோடு கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இத்திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்தபோது, மண்ணெண்ணெய் எடுப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அதனால் மக்கள் நிலங்களை வழங்கினர். பின்னாளில்தான் இதன் முழுவிபரமும் தெரியவர வேளாண்குடி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டங்களைக் கையிலெடுக்க ஆரம்பித்தனர். டெல்டாவைப் பாதுகாக்காத்து தமிழகத்தைப் பாதுகாக்காததற்குச் விழிப்புணர்வு கொள்ள ஆரம்பித்தனர். இதனால் ஆளும் வர்க்கத்திற்குத் தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் உருவாகின.
உததரகாண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சில பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், மிகப்பெரிய சமவெளிப் பகுதியாகவும், வேளாண்மைக்கு உகந்த நிலப்பரப்பாகவும் தமிழகத்தில் காவிரி டேல்டா மாவட்டங்களே உள்ளன. காவிரிப்படுகை போன்ற சமவெளி, ஒருங்கிணைந்த இந்திய நிலப்பரப்பில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை. எந்தவொரு மலையும் குன்றும் இல்லாமல் முழுவதும் வண்டல் மண் படித்த சவெளியாக உள்ளது இங்கு மட்டும் தான். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, பதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியானது. 28 லட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களைக் கொண்டது.

குறுவை, சம்பா ஆகிய பயிர்கள் தான் பிரதானமானவை. நெல் உட்பட 33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் காவிரி டெல்டாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயப் பகுதியில், கடந்த 2009 ம் ஆண்டு, காவிரியில் நிலக்கரிப் படுகை மீந்தேன் எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளிந்தது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களையடுத்து, 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து, 2015ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று திரண்டு ஓராண்டு தோட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்தப் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்துக்கும் விரிவடைந்தது. எண்ணெய் கிணறுகள். தங்களின் விவசாய நிலங்களைப் பாழ்படுத்தி விட்டதால், இத்தகைய திட்டங்களை காவிரி டெல்டாவில் நிறைவேற்றர் கூடாது மற்றும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாய அமைப்புகளும், பல கட்சிகளும் எழுப்பி வந்தன. ஆனால் மீண்டும் 2019ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓவன்ஜிசி மற்றும் வேதாத்தா நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் வேதாந்தாவின் 274 கிணறுகளும், ஓஎன்ஜிசியின் 215 கிணறுகளும் அடங்கும்.

காவிரிப்படுகையில் மட்டும் கடலூரை ஒட்டியுள்ள ஆழமான கடற்பகுதியில் 4 ஆயிரத்து 64 கிலோ மீட்ட பரப்பளவில் ஹைட்ரோகார்ன் ஆய்வுக் கிணறுகள் அமைக்கும் பணியை ஏலத்தில் வழங்கத் திட்டமிடப்பட்டது. இதற்கு மீண்டும் பல வேளாண் குடிமக்களும், தமிழகத்தில் உள்ள இதர கட்சிகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது மட்டுமின்றி போராட்டங்களையும் நடத்தப் போவதாக அறிவிப்பை வெளியீட்டனர்.
அன்றைய ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததன் விளைவாக, “காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். அது மக்களிடையே வரவேற்பைப் பெற்றது
வேளாண்மையும், வேளாண்மை சார்ந்த தொழில் கள் மட்டும் தான் இனி காவிரி டெல்டாவில் நடக்கும். காவிரி டெல்டாவில் 50% மக்கள் நில உடைமையாளர்களாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவுமே உள்வனர் அவ்வளவு பேருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை. அவை இனி உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் கிடைக்கப்பெற்றது.

இந்த அறிவிப்பானது காவிரி டெல்டாவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும்; இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி, பல சமயங்களில் கைதானவருமான பேராசிரியர் ஜெயராமன் கறிய போது, காவிரி டெல்டா பகுதிகளில் 28 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருந்தன. அது இன்று 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களாகக் குறைந்துவிட்டது. காவிரி நீர் கிடைக்காதது மட்டும் இதற்குக் காரணம் அல்ல. வியசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றியகும் முக்கியமான காரணம்.
இந்த அறிவிப்பால், விளைநிலங்களை எவரும் பிற பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி, வேதாந்தா, இந்திய ஆயில் நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதியில்லை. அதனால், எண்ணெய் கிணறுகளை இனி அங்கு அமைக்க முடியாத நிலை ஏற்படும். நிலத்தடி நீர், வயல்வெளிகளில் கச்சா எண்ணெய் கலப்பது இதனால் தவிர்க்கப்படும்.
2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினால் திமுக அரசு அரியணை ஏறியது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதையெல்லாம் எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தினார்களோ ஆளும் கட்சியாக வந்தபின் அதே. திட்டங்களைப் பெயர் மாற்றம் செய்து மீண்டும் கொண்டுவரும் வேலைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்…
தற்போது ஒன்றிய அரசு மீண்டும் டேடொ மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசு மெளனம் காக்கிறது. அண்ணன் சீமான் அவர்களின் அறிக்கை ஒன்றே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது செந்தமிழன் சீமான் அவர்கள் ஈடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இவ்வாறான பல்வேறு சிக்கல்களை நாம் தமிழர் சுட்டிக்காட்டிப் போராடும்போது பலமுறை அரசு பின்வாங்கியிருக்கிறது. நடவடிக்கை எடுத்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் அறிக்கை ஒன்றே இத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நம்மால் மாற்ற முடியும் என்பதில் மாற்றுக்காத்து இல்லை!
திரு. தர்மர் பொன்னையா,
செந்தமிழர் பாசறை – கத்தார்.