மே 2023
திராவிட மாடல் எனும் திருட்டு மாடல்
திராவிட மாடல்! திருடர்களின் கூடல்!
ஒட்டுண்ணிகளின் திடல்! உயிர்க் கொல்லிச் சாக்கடல்!
மலை விழுங்கும் மகாதேவன்கள்! குலை யறுக்கும் கொலைகாரர்கள்
மணல் திருட்டில் மன்னர்கள! மனச் சான்றற்ற பிணங்கள்!
நிலம் பறிக்கும் கொள்ளையர்கள்! வளம் சுரண்டும் வள்ளல்கள்!
சாராயச் சந்தை முதலைகள்! சவப் பெட்டிகளின் முதலாளிகள்!
தாளத்தோடு தேன் தடவி உருட்டிவரும் திருட்டு மாடல்!
தஞ்சை நன்செய்நில மீத்தேன் எடுக்கும் திராவிட மாடல்!
நீட் தேர்வு இரகசியம் காக்கும் திருட்டு மாடல்!
படிக்கும் பிள்ளைகளின் உயிர் குடிக்கும் திராவிட மாடல்!
சாராயம் விற்க இலக்கு வைக்கும் திருட்டு மாடல்!
சந்தி சிரிக்க நிற்கிறது பார் திராவிட மாடல்!
பாசகவிற்குத் துணை நிற்கும் திருட்டு மாடல்!
சங்கிகளிடம் தொடை நடுங்கும் திராவிட மாடல்!
வீராப்பாய் முழக்கமிடும் திருட்டு மாடல்!
வெண் குடையை ஏந்தி நிற்கும் திராவிட மாடல்!
தமிழக உரிமைகளைப் பறிகொடுக்கும் திருட்டு மாடல்!
தத்தளித்துத் தடுமாறும் தட்டுக்கெட்ட திராவிட மாடல்!
கச்சத்தீவை மீட்போம் எனும் திருட்டு மாடல்!
கன்னித்தீவுக் கதையளக்கும் திராவிட மாடல்!
இலவசப் பேருந்தென இளக்காரம்பேசும் திருட்டு மாடல்!
சாதிச் சண்டையை வளர்த்துவிடும் திராவிட மாடல்!
மலைகளை வெட்டி விற்கும் திருட்டு மாடல்!
மண்ணெல்லாம் அள்ளித் தின்னும் திராவிட மாடல்!
ஆற்று மணலைக் கொள்ளையடிக்கும் திருட்டு மாடல்!
எதிர்த்துக் கேட்டால் கொலையும் செய்யும் திராவிட மாடல்!
கரும்புக் காட்டுக்குள் சாலை போடும் திருட்டு மாடல்!
குளக்கரையில் செங்கம்பளம் விரிக்கும் திராவிட மாடல்!
கல்விக் கொள்கையைச் சீரமைக்கச் சொல்லும் திருட்டு மாடல்!
கல்வியைக் கொள்ளையாய் மாற்றிச் சிரிக்கும் திராவிட மாடல்!
எளியவர்களுடன் படம் பிடித்துப் பரப்பும் திருட்டு மாடல்!
ஏராளமாய் விளம்பரங்கள் மட்டும் செய்யும் திராவிட மாடல்!
குசராத் மாடலுக்குக் குறைந்ததன்று திருட்டு மாடல்!
தனியாருக்கு எல்லாவற்றையும் தாரைவார்க்கும் திராவிட மாடல்!
இல்லம் தேடிக் கல்வியெனும் திட்டம் தந்த திருட்டு மாடல்!
இழிவு செய்யும் குலக்கல்வியை திரும்பக் கொணரும் திராவிட மாடல்!
கூவம் ஆற்றைச் சீரமைப்போம் என்ற திருட்டு மாடல்!
கூவத்தை விட அழுக்கானது உங்கள் திராவிட மாடல்!
பால் கட்டணம் குறைப்போம் என வாக்குறுதி கொடுத்த திருட்டு மாடல்!
பால் விலையை ஏற்றிப் பாமரர்களைக் கதற வைத்த திராவிட மாடல்!
சொத்து வரியைப் பன்மடங்காக்கிய திருட்டு மாடல்!
சொத்தையே வரியாக வாங்குவதே திராவிட மாடல்!
திருமணக் கூடங்களில் சாராயம் விற்கும் திருட்டு மாடல்!
தமிழ்ப் பெண்களைத் தாலியறுத்துத் தவிக்கவிடும் திராவிட மாடல்!
தண்ணீர்க் குடுவையில் உரம் விற்கும் திருட்டு மாடல்!
போதை மருந்துக் கடத்தலைக் கண்டுகொள்ளாத திராவிட மாடல்!
எட்டுவழிச் சாலைக்குக் கடும் எதிர்ப்பு காட்டிய திருட்டு மாடல்!
பசுமைவழிச் சாலை எனப் பெயர்மாற்றி ஏமாற்றும் திராவிட மாடல்!
ஊடகங்களை விலைக்கு வாங்கிய திருட்டு மாடல்!
ஊரையடித்து உலையில் போடும் திராவிட மாடல்!
பஞ்சமி நிலம் சுருட்டிய திருட்டு மாடல்!
பஞ்ச பூத ஊழல் செய்யும் திராவிட மாடல்!
பள்ளிப்பாடத்தில் திரிக்கப்பட்ட வரலாறாய்த் திருட்டு மாடல்!
கள்ளத்தனத்தைச் செய்யும் தகிடுதத்தத் திராவிட மாடல்!
நகைக்கடன் தள்ளுபடி செய்வோமென்ற திருட்டு மாடல்!
நகையெல்லாம் முங்கிப்போச்சேயென முனகவைக்கும் திராவிட மாடல்!
குடும்பத் தலைவிக்குத் தரம் பார்த்து ஆயிரம் தரும் திருட்டு மாடல்!
குடும்பத்தையே தரம் தாழ்த்தும் தீங்கினைச் செய்யும் திராவிட மாடல்!
இந்தி தெரியாது போடா என்று திரும்பத்திரும்பக் கூவிய திருட்டு மாடல்!
இந்தியோடு இந்திக்காரர்களையும் திணித்து வளர்க்கும் திராவிட மாடல்!
வங்கக் கடற்கரையைப் புதைகுழி ஆக்கும் திருட்டு மாடல்!
தங்கக் கடலழித்துப் பேனா வைக்கும் திராவிட மாடல்!
வலை வீசும் மீனவரைக் காக்காத திருட்டு மாடல்!
கவரி வீசி வடவரை வரவேற்கும் திராவிட மாடல்!
காரணம் ஏதுமின்றிப் பல் பிடுங்கும் திருட்டு மாடல்!
காவல் துறையை மக்கள்மீது ஏவிவிடும் திராவிட மாடல்!
சாராய ஆலைகளைத் தயக்கமின்றி மூடுவோம் என்ற திருட்டு மாடல்!
சாராயம் விற்கத் தானியங்கி இயந்திரம் வைக்கும் திராவிட மாடல்!
மிசாவில் கைதானோம் என முறுக்கிக் கொள்ளும் திருட்டு மாடல்!
விசாரணைக் கைதிகளைச் சிறையில் கொல்லும் திராவிட மாடல்!
சட்ட ஒழுங்கை எந்நாளும் பாதுகாப்போம் எனும் திருட்டு மாடல்!
கட்சிச் சட்டை போட்டுக்கொண்டு கொலை செய்யும் திராவிட மாடல்!
கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் திருட்டு மாடல்!
கொள்ளையர்களையே அமைச்சர்களாகக் கொண்ட திராவிட மாடல்!
நமக்குப் பின் சுற்றுச் சூழல் அணி அமைத்த திருட்டு மாடல்!
நமது இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் திராவிட மாடல்!
“ச்சீ” இசுகொயருக்கு வகைதொகையின்றி நிலம்தரும் திருட்டு மாடல்!
தொல்குடிகளை ஏதிலிகளாக்கி நிலம்பறிக்கும் திராவிட மாடல்!
நெல்வயலில் நடந்துபோகச் சாலை போடும் திருட்டு மாடல்!
வேங்கைவயலுக்குச் சென்று நடந்ததைக் கேட்காத திராவிட மாடல்!
தப்புத் தப்பாய்த் திட்டம் தீட்டிப் பின்வாங்கும் திருட்டு மாடல்!
தளராமல் நாம் தொடர்ந்தடிக்கச் சுருண்டுவிழும் திராவிட மாடல்!
ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட பொய்ப்பிம்பம் இந்தத் திருட்டு மாடல்!
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத திராவிட மாடல் ஒரு வெங்காய மாடல்!!
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.