சூன் 2023
உருட்டும் திருட்டும் திராவிடத்திற்கழகு!!!
எல்லாருக்கும் எல்லாம் உருட்டு மாடல்!
ஒரு சில குடும்பத்தினருக்கே பதவிகள்
என்று ஆனதென்ன திருட்டு மாடல்?
மாவட்டத்துக்கொரு கல்வித்தந்தை உருட்டு மாடல்!
ஏழைக்கோர் பள்ளி வசதியுள்ளோருக்கோர் பள்ளி
இது நீதிதானா திருட்டு மாடல்?
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு இரத்து மாடல்!
பணத்திற்கேற்ற மருத்துவமும் படிப்பும்
திராவிடத்தால் தானே திருட்டு மாடல்?
சமூக நீதி சமத்துவம் உருட்டு மாடல்!
மக்கள் வரிப்பணத்தில் ச.ம.உ.க்களுக்கு
வசதி வாழ்க்கை நியாயமா திருட்டு மாடல்?
பெண் விடுதலை பெற்றுத் தந்தோம் உருட்டு மாடல்!
பத்து ரூபாய் பயணச்சீட்டு ஓசி என
ஏளனம் செய்யலாமா திருட்டு மாடல்?
உடனடியாக ஊழலை ஒழிப்போம் உருட்டு மாடல்!
ஊரையடித்து உலையில் போடும் சாராய முதலைகளுக்குச்
சாமரம் வீசலாமா திருட்டு மாடல்?
உழவர் சந்தை அமைத்தோம் உருட்டு மாடல்!
உடலுக்கு உரமேற்றும் கள் இறக்கும் தொழிலாளிகளுக்கு
சிறைவாசம் சரிதானா திருட்டு மாடல்?
கல்விக்கு வங்கிக் கடன் வழங்குவோம் உருட்டு மாடல்?
கற்ற கல்விக்கேற்ற வேலையின்றி பட்டதாரிகளைக்
கடனாளியாக்கலாமா சொல் திருட்டு மாடல்?
விவசாயிகளுக்கு கடன் மானியம் உருட்டு மாடல்!
நெல் மூட்டைகளை முளைக்க வைத்து நெல்வயலில்
நடக்கச் சாலை போடலாமா திருட்டு மாடல்?
போதைப் பொருட்களை ஒழிப்போம் உருட்டு மாடல்!
உயிரைக் குடிக்கும் சாராயம் தரத் தானியங்கி
இயந்திரம் இப்போது தேவையா திருட்டு மாடல்?
சுற்றுச் சூழல் அணி அமைத்தோம் உருட்டு மாடல்!
சுற்றிலுமிருக்கும் மலைகளை உடைத்து நொறுக்கி
அடுத்தவர்க்குக் கடத்துவதேனோ திருட்டு மாடல்?
அனைவரும் அர்ச்சகராகலாம் உருட்டு மாடல்!
மேல்பாதியில் யாருக்கு அஞ்சி கோவிலுக்குப்
பூட்டு போட்டது இந்தத் திருட்டு மாடல்?
சமத்துவபுரம் அமைத்திருக்கிறோம் உருட்டு மாடல்!
சாதி பார்த்துத் தானே ஒவ்வொரு முறையும்
தேர்தலில் வாய்ப்பளிக்கிறது திருட்டு மாடல்?
அமலாக்கத்துறை வந்தால் பொங்குவோம் உருட்டு மாடல்!
மணல் கடத்தலை அதிகாரியே தடுத்தாலும்
அலுவலகத்தில் கொல்லும் இந்தத் திருட்டு மாடல்!
ஊழல் அமைச்சருக்கு ஆதரவாக
அறிக்கைவிடுவோம் உருட்டு மாடல்!
இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராகக் கேள்வி
கேட்டு எப்போ வருவீங்க மிஸ்டர். திருட்டுமாடல்?
இரட்டைக் குவளை முறை ஒழித்தோம் உருட்டு மாடல்!
புதுக்கோட்டை வேங்கை வயலில் தனித்தனித் தொட்டிகள்
இன்னும் ஏன் என்று சொல் திருட்டு மாடல்?
ஊடகங்களில் காட்டுவது விடியல் உருட்டு மாடல்!
உண்மை நிலையோ தமிழகம் இதுவரை காணாத
துயரத்திலும் துயரமில்லையா திருட்டு மாடல்?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு உருட்டு மாடல்!
கொலை கொள்ளை கொடுங்கோன்மையைத்
தூக்கிப் பிடிப்பது தானே திருட்டு மாடல்?
என்று தான் ஒழியப் போகிறதோ இந்தத் திருட்டு மாடல்?
அன்று தான் விடியப் போகிறது
இருட்டும் தமிழர் வாழ்வில்!!!
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.