சூலை 2023
கலைக்குரிசில் குறித்து கவிக்குரிசில்
பள்ளியில் மாணவர்கள் பகலுணவுண்ணும் வண்ணம்….
அள்ளி ஓர் இலக்கம் தந்த அண்ணல் கணேசர்
இந் நாள் புள்ளிணம் பாடும் சோலை
மதுரை போடி தன்னில்….. உள்ளதோர்
தொழிற் பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார்…!
இன்றீந்த வெண்பொற் காசோ
இரண்டரை இலக்குமாகும்..!
நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற..
குன்றொத்த பெருஞ் செல்வத்தை
குவித்தீந்த கணேசனார் போல
என்றெந்த நடிகர் ஈந்தார்… இப்புகழ்
யாவர் பெற்றார்..?
– பாவேந்தர் பாரதிதாசன்
(தமது கவிதை ஏடான குயில் இதழில் பாவேந்தர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேனி போடியில் உள்ள பள்ளிக்கு இரண்டு இலட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டி எழுதிய கவிதை வரிகள்)
சூலை – 21 : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள்