ஆகத்து 2023
விளைநிலத்தைப் பறிக்காதே!
சோறு தின்னும் மக்கள் எல்லாம்
இனி மேலும் சோம்பி இருக்கலாமா?
இல்லாத சுதந்திரத்தை நம்பி இன்னும்
இங்க நீங்க வாழ்க்கை நடத்தலாமா?
வெள்ளைக்காரன் ஆட்சியிலே
நம்ம வருமானத்தைப் பறிச்சாங்க!
உப்பு முதல் உடை வரைக்கும்
வரியை கட்டச் சொல்லி அடிச்சாங்க!
திராவிடர்கள் ஆட்சியிலே -(மக்கள்)
விளைநிலத்தை பறிக்கிறாங்க!
விற்கச் சொல்லி அடிக்கிறாங்க!
சொந்த மண்ணில் அடிமையாக்கி
அகதி போல வைக்கிறாங்க!
ஏடு எடுக்கும் முன்னே
ஏர் பிடித்தோம் நாங்க!
என்எல்சி வரும் முன்னே
இது எங்கள் இடம் தாங்க!
இப்ப காடு கழனி எல்லாமே
காக்கிச்சட்டை தாங்க!
காப்பாத்த வேண்டிய அவர்களே
கதிரை அழிக்கிறாங்க!
விளைந்த கதிரை அழிக்கிறாங்க!
பாடுபட்டு பயிர் வளர்த்தோம்
மக்கள் பசியைப் போக்க தாங்க!
படித்த பாவிகள் நெற்பயிரை
நாசமாக்கி விட்டுப் போறாங்க!
எங்க போவோம் நாங்க?
கால ஓட்டத்தில் காணாமல் போகும்
என்எல்சியை பாதுகாக்கிறாங்க!
காலமெல்லாம் கஞ்சி ஊத்தும்
காட்டைப் பறிக்கிறாங்க!
நெல் காட்ட அழிக்கிறாங்க!
அவசரமா வந்த அரசு
அதிகாரிகள் சொன்னாக!
அஞ்சு பத்து வாங்கி தரேன்
அமைதியா போங்க என்றாக!
என்ன செய்வோம் நாங்க?
அடுத்த நாள் அமைச்சர் வந்து
அவங்களும் இதத்தான் சொன்னாங்க!
இது அநியாயம் இல்லையாங்க?
அனுதினமும் செத்துப் பொழைக்கும்
அப்பாவி உழவுமக்க பாவமுங்க!
சோறு தின்னும் மக்கள் எல்லாம்
இனிமேலும் சோம்பி இருக்கலாமா
இல்லாத சுதந்திரத்தை நம்பி இன்னும்
இங்க நீங்க வாழ்க்கை நடத்தலாமா
திரு. நாகநாதன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.