spot_img

அப்துல்  கலாம்பொன்மொழிகள்

அக்டோபர் 2023

அப்துல்  கலாம் பொன்மொழிகள்

= வாய்ப்புக்காகக் காத்திருக்காதே…! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்…!

= கனவு காணுங்கள்… ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல… உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு!

= நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை… நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.. நீ நீயாக இரு..!

= நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.. ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!

= நீங்கள் புகழுடன் பிறந்தால், அது ஒரு விபத்து… நீங்கள் புகழுடன் இறந்தால், அது ஒரு சாதனை!

= இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி… மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது!

= நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்து கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன..!

= இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை, இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது!

= உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே… ஏனென்றால், கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு!

= நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை!

= சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல, கொழுந்துவிட்டு எரியுங்கள்!

சூலை – 27: தமிழினத்தின் அறிவியல் அடையாளம் அப்துல்  கலாம்  ஐயா நினைவு நாள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles