நவம்பர் 2023
ஈகி சங்கரலிங்கனாரும் தமிழ்நாடும்
சங்கரலிங்கனார் விருதுநகரில் பிறந்து வளர்ந்தபோது, அவர் படித்த அதே பள்ளியில் தான் காமராசர் அவர்களும் படித்தார்கள். சங்கரலிங்கனார் அவர்களுக்கு 1908ல் விடுதலை உணர்ச்சி பொங்க வ.உ.சி அவர்கள் பேசிய உரையைக் கேட்டு, போராட்டங்களில் ஈடுபாடு வந்தது. சங்கரலிங்கனார் அவர்கள் கதர் ஆடை மட்டுமே பயன்படுத்தி வந்ததோடு, இதை மக்களும் பின்பற்றிட கதரியக்கமும், கதர்கடையும் தொடங்கினார். அவரின் குடும்பம் வெளியூரில் வசித்த போதும், சங்கரலிங்கனார் அவர்கள் விருதுநகரில் ஒரு ஆசிரமத்தில் இருந்தார்.
அந்நேரம் ம.பொ.சி அவர்கள் மதராசு மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினார். அதை முன்னிட்டு சங்கரலிங்கனார் அவர்கள் 1954 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் விருதுநகரில் உண்ணாநோன்பைத் தொடங்கினார். 76 நாட்கள் உண்ணாது இருந்தும் அரசு கவனிக்காமல் இருந்தது. பின்பு அவர் உடல் நலம் குன்றி சிகிச்சை எடுக்க மறுத்து அக்டோபர் மாதத்தில் இறப்பைத் தழுவினார். இவரைப் போன்று பலரும் செய்த தியாகத்தால் தான், இன்று தமிழ்நாடு என்று நாம் நம் மாநிலத்தை அழைக்க முடிகிறது. அவருக்கு நமது நன்றிகளையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துவோம்.
செல்வன். எட்ரிக்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.