நவம்பர் 2023
தமிழ்நாடு நாள் !
தமிழ்நாடு நாள் கண்டது தமிழினமே!
தமிழர் நிலத்தை ஆள்வதோ திராவிடமே!
திராவிடரின் புகலிடமானது தமிழர் நிலமே!
தமிழகத்தைத் தமிழர் ஆள்வதெப்போது தமிழினமே?
முன்னற் எழிலாக வாழ்ந்த தமிழினமே!
பின்னற் திராவிடத்தால் வீழ்ந்த தமிழினமே!
மீண்டும் தமிழ்த்தேசியத்தால் எழுவோம் தமிழினமே!
இக்கணமே புலிப்பாய்ச்சல் கொள்வாய் தமிழினமே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
என எண்ணம் கொள்வாய் தமிழினமே!
இங்கும் தமிழினமே!
எங்கும் தமிழினமே!
என முரசரைவாய் தமிழினமே!
அன்று மாட்சியாய் தமிழினமே!
நேற்று சாட்சியாய் தமிழினமே!
இன்று காட்சியாய் தமிழினமே!
நாளை நாம் தமிழராட்சியின் எழுச்சியாய் தமிழினமே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.