வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து, அந்த ஒற்றுமையின் வலிமையினால் தமிழர்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பதும், தமிழினத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவல்ல தேர்ந்த தமிழ் ஆற்றல்களை சமூகப் பண்பாட்டு அரசியல் மற்றும் அறிவுப்புலத் தளங்களில் கண்டறிந்து, கூர்மைப்படுத்தி, உரிய இடத்திற்கு பொருத்துவதும் எங்களின் இலக்கு மற்றும் பெருங்கனவு.
எங்களைப் பற்றி
செந்தமிழர் பாசறை வளைகுடா நாம் தமிழர் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அயலக அமைப்பு. தமிழ்த்தேசியத்தை முதன்மைக் கொள்கையாகக் கொண்ட சமூகப் பண்பாட்டு அரசியல் இயக்கமாக இயங்கும் செந்தமிழர் பாசறை வளைகுடா சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அரபு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழி வளர்ச்சிக்கும், இன்னலுறும் தமிழர்களின் துயர் துடைக்கும் அமைப்பாக செயல்படும் செந்தமிழர் பாசறைகளில் ஆன்றோர் அவையம், தகவல் தொழில்நுட்பப் பாசறை, மகளிர் பாசறை, மழலையர் பாசறை, மாணவர் பாசறை, குருதிக் கொடை பாசறை, கலையிலக்கியப் பாசறை, சேவை மைய உதவி எனப் பல பிரிவுகள் உள்ளன. இப்பாசறைகளில் கட்சி சார்ந்த நிகழ்வுகள், உறுப்பினர் கூட்டங்கள், தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வுகள் & விழாக்கள், தமிழுக்கும் தமிழர்க்கும் உழைத்த சான்றோருக்கும், உயிரீகம் செய்த தியாகிகளுக்கும் செலுத்தப்படும் நினைவேந்தல்கள் போன்றவை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகள் குறித்த விவரங்களும், வளைகுடாவாழ் படைப்பாளிகளின் பல்சுவைப் படைப்புகளையும் தாங்கி வரும் மின்னிதழான "செந்தமிழ் முரசு", செந்தமிழர் பாசறை வளைகுடாவால் மாதமொரு முறை வெளியிடப்படுகிறது.
About Us
Senthamizhar paasarai is Naam tamilar katchi's recognised gulf wing. As Tamil nationalism is our core ideology, we are functioning as a socio cultural political organisation catering various needs of the Tamil diaspora in Persian gulf countries. Individual Senthamizhar paasarais of Saudi Arabia, Oman, UAE, Kuwait, Qatar and Bahrain which are based in the respective countries concentrate on the growth of Tamil language and alleviate the plights of expatriates. The institutional structure comprises council of elders, IT wing, women wing, youth wing, blood donation wing, art and cultural wing and service centre wing and so on. We organise overseas events of Naam Tamilar katchi like party related affairs, cadre meetings, celebrating important days and festivals of Tamil culture, commemorating great personalities and martyrs who dedicated their life for Tamil language and its people. The details of those activities and the art and literary creations of gulf Tamil talents are exhibited in the E-magazine "Senthamizh murasu" released monthly by Senthamizhar paasarai - Gulf.
இலக்கு
நோக்கம்
தமிழைத் தங்களது பேரடையாளமாகத் தூக்கிப்பிடிக்கும் வளைகுடாவாழ் தமிழர்களை ஒரு குடையின் கீழ் திரட்டி, “தமிழின முன்னேற்றம்” எனும் ஒற்றைக் குறிக்கோளை நோக்கிச் செலுத்துவதும், அவர்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்திருந்தாலும் கூட பெருமைமிகு பேரினமாம் தமிழினத்துக்கான தங்களின் கடமைகளைத் தவறாமல் செய்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவதும் எங்களின் மேலான நோக்கம்.
Vision
To provide a huge platform uniting Tamils of Persian gulf countries and to harness that power of unity for the betterment of Tamils. To find, hone, showcase and establish immense tamil talents on socio cultural political intellectual fields facilitating a promising future for the Tamil race.
Mission
To bring together the Gulf Tamil diaspora who uphold Tamil as our greater identity working for a shared common purpose of giving something back to our ancient Tamil community and offering them ample opportunities to perform the duties and responsibilities towards the noble race we belong no matter how far we live from our home land