ஏப்ரல் 2024
வெற்றிவாகை!
சீமான் அண்ணனே எங்கள் சின்னம்!
தேசியத் தலைவரே எங்கள் தத்துவம்!
சுடும் உண்மையே நமது மொழி!
கடும் உழைப்பே நமக்கிருக்கும் வழி!
செலுத்திடுக செலுத்தவைக நமக்கு நல்வாக்கை!
மாற்றிடுக மாற்றச்செய்க இத்தேர்தல் போக்கை!
தேசிய இனங்களின் கூட்டமைவே இந்திய ஒன்றியம்!
அவற்றை ஒடுக்கினால் இவ்வமைப்பு கெட்டழியும்!
கொள்கைவகுப்பில் பங்கேற்க வேண்டும் உண்மைத்தமிழர்!
நிலவளப்பாதுகாப்புக்கு அவரே உரிமைக்குரல் தருவர்!
தேர்தல் களமிது! மக்கள் தீர்ப்பளிக்கும் களமிது!
நமக்கான காலமிது! நாம் தமிழர் காலமிது!
அன்னைத் தமிழே! அன்பெழில் வடிவே!
உன்னை நம்பிக் களம் புகுகிறோம்!
வண்மைத் தமிழர் வளங்காக்க வாய்ப்பளி!
திண்மைத் தமிழ்நில அதிகாரம் தனைக்கையளி!
என்னுயிர்த் தமிழரே! ஏறுநிகர் இளையோரே!
இணைந்து நின்று இனத்துக்கான பணியாற்றுவீர்!
இன்மையினி இங்கில்லை யென்றே ஆக்கிட
நன்மையதை நம் நிலத்துக்கு நல்கிட
நாம் தமிழராய் நாற்புறமெங்கும் திரள்வோம்!
நற்றமிழர்க்கு வெற்றியதை நாளை பகிர்வோம்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
வெற்றியொன்றே உறுதிசெய்யும் அதைப் பெறுதலை!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.