spot_img

ஈழத்தில் சந்திப்போம்!

மே 2024

ஈழத்தில் சந்திப்போம்!

பட்ட துன்பம் எதுவும் மறக்கவில்லை
கெட்ட நிலை இன்னும் மாறவில்லை

கொத்துக்குண்டுகளால் செத்து விழுந்தன சனம்
மொத்தநாடுகளும் கைக் கொண்டன மௌனம்

காங்கிரசின் கையே இனத்தை அழித்தது
திமுக சூரியனே இனப்படுகொலையை மறைத்தது

ஆரிய இந்தியம் இனமழிக்கத் துணை நின்றது
திராவிடத் தமிழகம் இனத்துரோகம் புரிந்தது

கொத்துக் கொத்தாய்ச் செத்து மடிந்தனர்
அழுது கலங்கி புலம்பி நின்றிருந்தனர்

மானாட மயிலாட கண்டு மயங்கிக் கிடந்தோம்
சாராய போதையில் உணர்வற்று விழுந்தோம்

இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டது
இனம் அங்கே அழிக்கப்பட்டது

ஆரிய திராவிட சூழ்ச்சிகளால் அலைந்து
திரிகிறோம் உலகெங்கும் இன்று அகதிகளாக!

வழி எங்கும் கொடும் துரோகங்கள் என
வழிகாட்டும் வரலாற்றுப் பக்கங்கள் பல

நற்றமிழர் இனத்தின் வலியுணர்ந்தோம்;
நாற்புறமும் எதிரிகளை இனம் கண்டோம்!

துணிந்து நாம் களம் கண்டோம்! கடைசிவரை
சாவை நேருக்குநேர் எதிர்கொண்டோம்!

முள்ளியில் விழுந்தவர்கள் விதையாகிப் போனார்கள்
முளைத்து எழுந்தவர்கள் நாம் தமிழரானார்கள்

மொத்தமும் எழுகின்றோம் நாங்கள் இன்றே
தாயகமாம் ஈழம் நமதாகும் நாளை நன்றே

நமக்கு நாமே துணை என்று புரிந்து
நாம் தமிழராய் நிற்கிறோம் நிமிர்ந்து

வரலாற்றைப் படிக்கின்றோம் இப்போது
வரலாற்றைப் படைக்கின்றோம் பிற்பாடு

அறவழியை கைக்கொண்டு அறிவாயுதம் தூக்க வேண்டும்
இழப்பிலிருந்து மீள இனம் விடுதலை பெற வேண்டும்

தாய் மண் இழந்த வலி நீக்க
தாய் மண் மீட்க வழி உண்டோ?

அழிக்கப்பட்ட நம் வரலாற்றை ஊருக்குரைக்க
உலகத்தின் செவிகளிலே பறை கொண்டடிக்க

இனி ஓயாமல் ஓட வேண்டும்
ஒடி ஒடி உழைக்க வேண்டும்

அலறல் சத்தமும் இனி வேண்டாம்
அவலக் குரலும் இனி வேண்டாம்

தனித் தமிழீழம் ஒன்றே தான் தீர்வு
நாம் தமிழராய் இணைந்து நீ நிறுவு

சாதியாய் மதமாய் அன்று பிரிந்தோம்
பல தலைமுறைகளாய் சதியில் விழுந்தோம்

பண்பாட்டுக் கூறுகளைக் காக்கத் தவறினோம்
பழந்தமிழர் அறிவை இழந்து தவிக்கிறோம்

முன்னோரின் பிழையால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம்
இன்றோ நம்மெழுச்சியால் கைவிலங்கை ஒடிக்கின்றோம்

நாடொன்று கட்டுவோம் தமிழர் நமக்காக
அதை நாளும் கொள்வோம் இலக்காக

வரலாறு திரும்பி வரும் காலமிது!
வரலாற்றைப் படைக்கத் திமிறி எழு!

ஈழத்தில் சந்திப்போம்!
ஈழத்தில் சந்திப்போம்!

திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles