மே 2025
தமிழீழப் படுகொலை
தோட்டா துளைத்து வீழவில்லை தமிழா!
துரோகம் இழைத்ததில் வீழ்ந்தோம் தமிழா!
எம்மினத்தின் குரல் அலையலையாய்
காதினோரம் மோதிக்கொண்டு தானிருக்கிறது.
மே 18 வந்தாலே இதயக் கூட்டில்
ஈட்டிகள் இறங்குகின்றன…
ஈழ நிலத்தின் நீரோட்டத்திற்குள்
கலந்திருக்கிறது உருக்குலைக்கப்பட்ட
தமிழினத்தின் குருதி தோய்ந்த
உறவுகளின் இறுதி ஓலம்!
சிங்களா! நீ கொன்று புதைத்தாய்
எம்மை என்று நினைத்தாய் !
நீ மண்ணில் புதைத்தது எம்
விடுதலைக்கான வீர விதைகள்….
இலங்கை நிலம் ஒருநாள்
இரண்டாய்ப் பிளந்தே தீரும்…
இரத்தமும் சதையுமாய்ச் சிதைத்து
புதைக்கப்பட்ட மாபெரும் தமிழ்க்கனவு
ஒரு நன்னாளில் நிறைவேறும்!
ஆம் நிறைவேறும்!
உறுதியாக நிறைவேறும்!
திருமதி. அபிராமி திருமலைக்குமரன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.