மே 2025
சமர்க்கள நாயகன் மாவீரன் பால்ராஜ்
ஈழத்தாயகம் ஈன்றெடுத்த
மலையகத்து மாவீரன்…
உள்ளத்துணிவு கொண்டு
உழைத்திட்ட உத்தமவீரன்
தாய்நில மீட்சியெனும்
தலையாயக் கடமையேற்றவன்…
சிறுபடை கொண்டு
சிங்களனை விரட்டியடித்தவன்…
ஆனையிறவுப் படைத்தளத்தை
அலறவைத்த அனல்வீரன்..
தலைவர் கண்ணசைவில்
களம்புகும் கணல்வீரன்…
உன்னதத் திட்டந்தீட்டி
ஊடறுக்கும் யுத்தவீரன்
சூரர்களை உன்பின்னே
சுழலவிட்ட சுத்தவீரன்
உலகையே அதிரவிட்ட
குடாரப்புத் தரையிறக்கம்
உன் பெயர் கேட்க
எதிரிக்குக் குலைநடுக்கம்
பரிதிமதி உள்ளவரை
பார்புகழும் தமிழர்
விடுதலை வரலாற்றில்
உன் பெயரிருக்கும்
தலைவருமே தன்பின்னால்
உன்படம் மாட்டிவைக்க
பகைவனுமுன் புகழுரைப்பான்
பதறிப்போய் எழுந்துநிற்பான்
போர்க்களத்தில் தோல்வியுறா
திடமான உன்னிதயம்
நோய்க்களத்தில் தோல்வியுற
நெடுந்தூக்கம் தூங்குகின்றாயோ….
சிங்களவனைக் கதறவிட்ட
எங்களவன் நீ வாழ்கவே!
“சமர்க்கள நாயகன்
“மாவீரன் பால்ராஜே!”
திரு. மருதநிலவன் மா.வடிவேலன்,
ராக் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.