spot_img

தொடரும் திமுக பிரமுகர்களின் பாலியல் குற்றங்கள்

சூன் 2025

தொடரும் திமுக பிரமுகர்களின் பாலியல் குற்றங்கள்

தற்போது அரக்கோணத்தில் நடந்த பயங்கரச் சம்பவம், தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. அரசுக்கல்லூரியில் படிக்கும் மாணவியர் மீது பாலியல் துன்புறுத்தல் நடந்ததற்குப் பின்னால் ஒரு முக்கியமான திமுக முக்கிய பிரமுகர்/ ஆதரவாளர் குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். ஆனால் அதற்கெதிராக எந்தவிதமான கடும் நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட அநீதிக்கு இன்று வரை முறையான நடவடிக்கை இல்லை. யார் அந்த சார்? என்ற கேள்விக்கும் பதில் இல்லை? இன்னும் பல…தொடரும் பாலியல் குற்றங்களுக்கு அரசு ஆதரவு, காவல்துறை மௌனம் – மக்கள் எங்கே செல்வது? யாரிடம் முறையிடுவது?

திமுக ஆட்சியின் கீழ்  அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளின்படி 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் & அதன் விவரங்கள்:

பொது இடங்களில் பெண்கள் மீதான அத்துமீறல்கள்: 12,300+

கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் நடந்த நிகழ்வுகள்: 1,900+

அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகள்: 300+

MLA/MP ஆதரவாளர்கள் தொடர்புடைய வழக்குகள்: குறைந்தது 90 வழக்குகள்.

இவற்றில் குறைந்தபட்சம் 45% வழக்குகள் இன்னும் நீதிமன்றமே செல்லாத நிலையிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் 2021 முதல் 2024 வரை பதிவு செய்யப்பட்ட பெண்கள் & பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் கீழே ஆண்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன:

பாலியல் குற்றங்கள் (போக்சோ சட்டம்):

 2021: 4,415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 2022: 4,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 2023: 4,581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 2024: 6,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்:

 2021: பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 8,501 ஆக பதிவாகியுள்ளன. 

 2022: பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 9,207 ஆக பதிவாகியுள்ளன  (ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கோ அல்லது துன்புறுத்தலுக்கோ ஆளானதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன).

திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. காவலர்களுக்கு பயந்து கொண்டு காவல் நிலையத்திற்கு வராத வழக்குகள் எத்தனை? திமுகவின் அரசியல் அழுத்தங்களால் நடவடிக்கையற்ற காவல்துறை, யாருக்கு நீதியளிக்கப் போகிறார்கள்?

மக்கள் மனதைக் நடுங்கச் செய்யும் இந்தச் சம்பவங்களில் காவல்துறை செயலற்றதோடு, சில நேரங்களில் பாதிப்படைந்தவர்களை மிரட்டும் நிலைக்கே தள்ளுகிறது. இதற்கு காரணம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அரசியல் பின்னணி, சட்டத்தின் மீது இருக்கும் அதிகாரம், நாட்டு மக்களுக்காக பணி செய்கின்றோம் என்ற உணர்வு இல்லாமல் பொறுப்பற்றதனமாக இருப்பது தான்.

திமுக அரசு மகளிர் பாதுகாப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே இருக்கிறது ?

மக்களின் வரிப்பணத்தில் பரபரப்பான மற்றும் பளபளப்பான விளம்பரங்களைக் காட்டி மக்களை மடைமாற்ற முயற்சிக்கின்ற இந்நிலை, “ஓட்டுக்கு பணம், ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல்” என்ற பழமொழியை மீண்டும் உண்மையாக்குகின்றது  திமுக அரசு. மக்களிடம் திமுகவின் முகப்பூச்சு கலைந்து கொண்டிருக்கிறது.

ஊடகங்கள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளிடம் ஊழல் செய்து திமுகவின் ஊதுகுழலாக மாறிக்கொண்டிருக்கிறது.மகளிர் அமைப்புகளெல்லாம் எங்கே போனீர்கள்? சென்னை முதலான நகரப்பகுதிகள் முதற்கொண்டு குக்கிராமங்கள் வரை அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறு முனகல் கூட என் உங்களிடமிருந்து வரவில்லை? நேற்று அண்ணா பல்கலைகழகமென்றால் இன்று அரக்கோணம் கல்லூரி…

பொதுமக்களாகிய நாமே தான் இனி துணிந்து முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்க வேண்டும். அரசியல் ஆதிக்கத்திற்கும் காவல்துறையின் நடுநிலையற்ற தன்மைக்கும் எதிராக உரக்கக் குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல் இன்று எங்கோ நடப்பது நாளை நமக்கருகில் நடக்கலாம்.

தமிழ்நாட்டைக் காக்கும் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து, ஆலமரமாக இப்பொழுது வளர்ந்து கொண்டிருக்கின்ற நாம் தமிழர் கட்சியோடு மக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பும் சேர்ந்து போராடுவோம். தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற தேர்தலில் அறமற்ற திமுக என்ற தீய மாடல் அரசை அதிகாரத்திலிருந்து இறக்க தங்களுக்குள்ளே உறுதியற்று செயல்படுங்கள்.

திமுக அரசு மகளிர் பாதுகாப்பில் தோல்வியடைந்துவிட்டது.  உண்மை ஒளிவிடுவதை நாம் தேடலில் நமக்குத் புரிய வேண்டும். மாணவிகளின் மீதான பாலியல் அத்துமிரல்களுக்கு தமிழ் மண்ணில், நீதியின் ஒலி ஓங்கி ஒலிக்க வேண்டும்.

திரு. க.நாகநாதன்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles