சூன் 2025
தமிழ்ப்பெரும் பாட்டன்
பெரும்பிடுகு சுவரன் மாறன்
சதயத்தில் பிறந்த வேந்தரே!
சங்கத் தமிழ் மாந்தரே!
முப்பெரும் மன்னருள் மூத்தவர்!
முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி தந்தவர்!
பழந்தமிழ் அரச மரபினர்!
பார்போற்றும் தமிழ்ப் பேரரசர்!
பதினாறு பெரும்போர் கண்டவர்!
வாகைப்பூச் சூடி வெற்றிக்கொண்டவர்!
கரிகாலச் சோழனின் பேரனவர்!
இராசராசச் சோழனின் பாட்டனவர்!
கயல்சேர் கொடிகண்ட வேல்மாறன்!
வானாளவப் புகழ்நாட்டிய வான்மாறன்!
தரணியை ஆண்டத் தஞ்சைக்கோன்!
வாகைப்பூச் சூடிய வல்லக்கோன்!
நெய்தல் நிலத்தின் தென்னவன்!
செந்தலைச் சான்றின் மன்னவன்!
வீரத்தில் சிறந்த விடேல் விடுகு!
தீரத்தில் திகழ்ந்தப் பாட்டன் பெரும்பிடுகு!
பழந்தமிழ்ப் பேரரசே வாழியவே!
சதய விழா வேந்தனே வாழியவே!
வாழியவே! வாழியவே! நின்
கொடி கொடை புகழ் வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.