spot_img

தமிழ் மக்கள் புரட்சி

சூன் 2025

தமிழ் மக்கள் புரட்சி

வரலாற்றில் வந்த வழியைத் தெரிந்து கொண்டோம்!
வீழ்ச்சியில் வாடும் நிலையைப் புரிந்து கொண்டோம்!

நயவஞ்சகத்துடன் நம்மவரென நாடாண்டவன் செயலாலே
நலிவுற்று நாம் இங்கே நாதியின்றி நிற்கின்றோம்!

ஆரியமும் திராவிடமும் தமிழர்களை அடிமையாக்கி ஆள்கிறது!
அன்போடு தின்னச் சொல்லி அரளிக்காயைக் கொடுக்கிறது!

அடிமைகளாய் அழுது வாழ்ந்திடவா அரும்புகளைப் பெற்றெடுத்தோம்!
பிடித்திருக்கும் பீடைகளை உடைக்கவே நாம் பிறப்பெடுத்தோம்!

அச்சம் எமக்கில்லை எனப் பறை கொட்டிப் பாடிடுவோம்!
கயவர்களின் ஆட்சியை களையெடுக்க இன்றே இணைந்திடுவோம்!

தமிழனைத் தடுக்கின்ற பெருந்தடைகளை தகர்த்தெறிவோம்!
தமிழினை மறைக்கின்ற உயர்மலைகளைப் பெயர்த்தெறிவோம்!

புண்ணிய பூமியிலே புரட்சி ஒன்று பிறக்கட்டும்!
பூந்தமிழ் நாட்டிலே நாளை நம் பிள்ளை சிறக்கட்டும்!

புலம்பல்கள் யாவும் மக்கள் புரட்சியாக வெடிக்கட்டும்!
புதியதோர் தமிழகத்தை நாம் தமிழர் படைக்கட்டும்!!

திரு. க.நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles