செப்டம்பர் 2025
திராவிடக் கோடாரியை உடைத்தெறிவோம்!
காடு மலைகள் கண்முன்னேக்
களவு போகுது!
தமிழ்நாட்டு வளங்கள் யாவும்
வெம்பி யழுவுது!
திராவிக் கோடாரியும் மலையை
வெட்டிச் சாய்க்குது!
காட்டு வளத்தைக் காசாக்கி
உண்டு கொழுக்குது!
காக்கை குருவி கண்ணீர்விட்டுக்
கதறித் துடிக்குது!
வாக்கை வாங்கி ஆட்சிசெய்யும்
அரசும் நடிக்குது!
போராடும் மக்களையும் பொய்பேசி
அரசு நசுக்குது!
கேள்விகேட்க வீதி வந்தால்
பொய்வழக்கும் பாயுது!
தமிழ்க் கூட்டம் திரண்டெழும்
வேளை இது!
நாம் தமிழராய் ஒன்றிணையும்
காலம் இது!
தமிழைத் தந்தருளியத் தமிழ்க்
குல விளக்கு!
முப்பாட்டன் முருகனுமே வழித்
துணையாக நமக்கு!
தமிழிலே சொல்லெடுத்து முழங்கிடுவோம்
வெற்றிவேல்! வீரவேல்!
தரணியில் ஒலிக்கட்டும் போர்முரசாய்
நாம் தமிழர்! நாம் தமிழர்!
தமிழர் நலன்காக்கத் தமிழர்படையை
நாள்தோறும் பெருக்கிடுவோம்!
தமிழர் வேல்கொண்டு திராவிடக்
கோடரியை அகற்றிடுவோம்!
திசைகளெட்டும் ஒலிக்கட்டும் தமிழரின்
புரட்சிக் குரல்!
தரணியெங்கும் கேட்கட்டும் நாம்தமிழரின்
வெற்றிக் குரல்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.