செப்டம்பர் 2025
விழித்திடு தமிழா!
உன் பெருமை ஏன் மறந்தாய் தமிழா!
உன் அறிவை ஏன் இழந்தாய் தமிழா!
வீரத்தை ஏன் மறைத்தாய் தமிழா!
வீரியத்தை ஏன் குறைத்தாய் தமிழா!
அகிலத்தையே ஆண்ட வீர பரம்பரையின் உறவடா நீ!
வையகத்துக்கு வைத்தியம் பார்த்த ஆதிக்குடியடா நீ!
வாரி வழங்கிய வள்ளல்களின் வாரிசடா நீ!
அன்னை பூமியின் அதிகார வர்க்கமடா நீ!
இழந்தது போதும் இனியேனும் எழுவோமடா!
திராவிடத்தை ஒழித்து தமிழ்த்தேசியம் படைப்போமடா!
உறங்கிய விழிகள் விழிக்கட்டும்
உற்சாகம் நம்மில் பிறக்கட்டும்
அடிமை விலங்கு உடையட்டும்
திராவிடம் கூண்டுக்குள் அடையட்டும்
சுதந்திரம் நமக்குக் கிடைக்கட்டும்
சாதியும் மதமும் தொலையட்டும்
தமிழனின் ஆதிக்கம் மலரட்டும்
பிறரும் நம்முடன் வாழட்டும்
காத்திருந்தது போதும் தோழா!
களையெடுப்போம் இனியேனும் தோழா!
தலைநிமிர்த்த தலைவன் இருக்கிறான்!
தாங்கிப் பிடிக்க அண்ணன் இருக்கிறான்!
தயங்காமல் களத்தில் இறங்கு!
தரணியெங்கும் உன்புகழ் ஓங்கும்!
தமிழோடு பிறந்தோம்
தமிழால் இணைந்தோம்
தமிழராய் வாழ்வோம்
நாம் தமிழராய் ஆள்வோம்
நாம் தமிழர்.
திரு. மு. ஷாஜஹான்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.