செப்டம்பர் 2025
தமிழரை ஆள்வது தமிழாகட்டும்!
அரசியல் களம் நமது தமிழா!
அதற்கான காலம் நமது தமிழா!
இந்த நிலம் நமது தமிழா!
இதிலுள்ள வளம் நமது தமிழா!
ஒற்றுமையே நமது
பலம் தமிழா!
தமிழர் ஓர்மையே
நமக்கான பாலம் தமிழா!
முரசுகொட்ட தோல்பறை
தந்திடும் தாளம்!
அரசுகட்டி வெற்றிமாலை
சூடவரும் வேழம்!
அறிவாய் தமிழா
தமிழரெல்லாம் ஓர்குலம்!
எழுவாய் தமிழா
திராவிடம் வீழ்தலே நலம்!
பெருக்கிடலாம் தமிழா
வலுவான படைக்களம்!
திராவிடத்தை வீழ்த்தி
வரலாறு படைக்கலாம்!
அஞ்சாமை தமிழர்
உடமையென உணர்த்திடுவோம்!
ஆரியத் திராவிடப்
புரட்டுகளைத் தகர்த்திடுவோம்!
தமிழ்மொழி காத்திட திராவிடப்
பொய்யர்களை அகற்றிடுவோம்!
தமிழினம் வாழ்ந்திட தமிழரையே
அரியணையில் ஏற்றிடுவோம்!
திரு. பா. வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.