செப்டம்பர் 2025
மரங்களின் மாநாடு
மரங்களோடு பேசுகின்றான்
மரத்தின் மனங்களோடும் பேசுகின்றான்!
மக்களுக்காகப் பேசுகின்றான்
மக்களின் மனச்சான்றோடு பேசுகின்றான்!
காக்கை குருவிகளின்
வாழ்வைப் பேசுகின்றான்!
காட்டின் தேவையை
நாளும் போதிக்கின்றான்!
மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளின்
வாழிடம் என்றான்!
மேய்ப்பர்களின் நிலையான தொழிலுக்கு
வாழ்வாதாரம் என்றான்!
கயவர்கள் கூட்டம் காட்டினை
அழிப்பது சரியோ?
கல்லாக்கட்ட மரங்களின் உயிரைப்
பறிப்பதும் முறையோ?
வெட்டுண்டுக் கிடப்பது
மரங்களின் உடற்பாகங்களே!
அதனால் சிதறியது குருவிகளின்
கூடுகள் தானே!
செடிகொடியும் காய்ந்த சருகானது!
வழி நெடுகிலும்
அவற்றின் அழுகுரல்
மரண ஓலமானது!
கண்ணீர் விட்டு அழுவது
காக்கைக் குருவிகளோ!
காடுகள் கொண்ட
மரங்களும் தானே!
விட்ட கண்ணீர் ஓடியது ஆறாக!
பட்ட மார்பில் வழிந்த பாலாக!
கைக்குட்டை கொண்டு கண்ணீரைத்
துடைக்க வந்தான்!
கணப்பொழுதில் கலங்கியது அவனின்
கண்களும் தானே!
மானிடக் கூட்டத்தினை நல்வழி
நடத்த வந்தான்!
காட்டு மரங்களின் துயர்கண்டு
வெம்பி நின்றான்!
மக்களின் மனங்களை
அறிய வந்தவன்!
மரங்களின் மனங்களை
அறிந்து வென்றான்!
மரங்களின் மாநாடு முதல்முறை
கண்டிடும் தமிழ்நாடு!
அண்ணன் சீமான் கரம்பற்றி
நடப்போம் பெருமையோடு!
திரு. பா. வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.