பிப்ரவரி 2023
தமிழும் அறிவும் – தமிழ்ச்சங்கங்கள்
பனையூரில் வசிக்கும் ஒரு அழகான குடும்பம். மாறன் அவன் மனைவி பொற்கொடி. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அறிவுச்செல்வி. ஒன்பது வயதாகிறது. அவ்வூரிலுள்ள அரசு ஆரம்ப பாடசாலையில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் கெட்டிக்காரி. பெயருக்கேற்றார் போல் அறிவோடு திகழ்பவள்.
மகன் தமிழ்ச்செல்வன். ஆறுவயதாகிறது. அதே பாடசாலையில் முதலாம் வகுப்பு மாணவன். பாடசாலையில் சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிறது. துருதுருவென்று எதையும் அறிந்து கொள்ளும் வகையில் ஐயத்துடன் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருப்பான்.
அக்காள் அறிவுச்செல்வி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியிலும், வீட்டிலிருக்கும் போதும், அவனது ஐயங்களுக்கு தனக்குத் தெரிந்த அளவில் விடையளிப்பாள்.
இன்று காரிக்கிழமையாதலால் மாறன் வெகு சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டான்.
குழந்தைகளுடன் விளையாட்டாக உரையாடிக் கொண்டிருந்தான். அவ்வப்போது பொற்கொடிக்கும் வீட்டு வேலைகளில் உதவிக் கொண்டிருந்தான்.
அறிவுச்செல்வி தந்தையை நோக்கி,
அறிவு: அப்பா! சங்கத் தமிழ் என்றால் என்ன?
மாறன்: பழங்காலத்தில் தமிழை வளர்க்க ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அது தமிழ்ச்சங்கம், சங்கப்பலகை என வழங்கப்பெற்றது. அவ்வாறு வளர்க்கப்பட்ட தமிழே சங்கத்தமிழ் ஆகும்.
தமிழ்: என்னது, தமிழை வளர்க்க சங்கமா!
மாறன்: ஆம். தமிழ் இன்று உலக முது மொழியாக, இலக்கண இலக்கிய வளமை கொண்ட, அகம், புறம், அறிவியல், வானியல், கணக்கியல் என அறமும் வீரமும் அழகும் ஆற்றலும் கொண்ட செம்மொழியாக திகழ்வதற்கு காரணம் நம் முன்னோர் சங்கம் அமைத்து தமிழை வளர்த்ததனால் தான்.
தமிழ்: தமிழ்ச்சங்கத்தை அமைத்தது யாரப்பா?
மாறன்: முதல் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் காய்சின வழுதி எனும் பாண்டிய மன்னர்.
அறிவு: முதல் சங்கமா? அப்படியெனில் எத்தனை சங்கங்கள் இருந்தன?
பொற்கொடி: பழங்கால மரபிலக்கியப் படி, பாண்டிய மன்னர்கள் சங்கங்கள் தோற்றுவித்து தமிழ் மொழியை வளர்த்தார்கள். கூடவே, தமிழ் மொழி புலமையையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிகளையும் போற்றினார்கள். பண்டைய தமிழர்களின் அக புற ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல், பாடல், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் ஆகியவற்றிற்கு சான்றாக விளங்குவது சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களே!
அச்சங்கங்களை மூன்று வகையாக பிரித்தனர்.
தமிழ்: மூன்றா!
பொற்கொடி: ஆம்.
தலைச்சங்கம் எனும் முதற்சங்கம்.
இடைச்சங்கம் எனும் இரண்டாம் சங்கம்.
கடைச்சங்கம் எனும் மூன்றாம் சங்கம்.
அறிவு: அப்படியா!
மாறன்: ஆம். இந்த மூன்று சங்கங்களும் கி.மு. 16,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சிறப்பாக செயல்பட்டு தமிழ் வளர்த்த காலம் சங்ககாலம் என அழைக்கப்படுகிறது.
அறிவு: கீ. மு. 16,000 ஆண்டுகளுக்கு முன்னென்றால் இன்றிலிருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாயிற்றே!
தமிழ்: செந்தமிழன் சீமான் பெரியப்பா ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழி என்று சொல்லியிருக்கிறாரே!
பொற்கொடி: பல மொழியியல் ஆய்வறிஞர்கள் நிறுவியதை சீமான் பெரியப்பா எடுத்துரைத்து இருக்கிறார். ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தமிழை மேலும் வளப்படுத்தி, இலக்கணங்களை வகுத்து, இலக்கியங்களை படைப்பதற்காக தமிழ்ச்சங்கங்கள் நிறுவப்பட்டன.
அறிவு: பெரும் வியப்பாக இருக்கிறது. தமிழ்ச்சங்கங்களின் வரலாறை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது.
தமிழ்: மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றைச் சொல்லுங்களப்பா. எனக்கும் ஆவலாக இருக்கிறது.
பொற்கொடி: சொல்கிறோம். கேளுங்கள் செல்லங்களே! நாம் அனைவரும் கட்டாயம் நமது வரலாறை அறிந்துகொள்ள வேண்டும்.
அறிவு: ஓகோ, அதனால் தான், வரலாற்றைப் படி, வரலாற்றைப் படை என நமது தேசியத் தலைவர் செல்லியிருக்கிறாரோ!
பொற்கொடி: எத்தனை ஆழமான, உயிரோட்டமுள்ள சொற்கள் அவை. மெய் சிலிர்க்கிறது. வரலாற்றை ஆழ்ந்து அறிந்ததனால் தான் தலைவர் வரலாற்று நாயகனாக திகழ முடிந்தது.
மாறன்: தேசிய தலைவரின் ஆழ்ந்த பட்டறிவும், தீர்க்கமான தெளிவுகளும், திட்டமிடலும், தொலைநோக்கும்; அவருக்கு நிகர் எவருமில்லை!…
தமிழ்: தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
அனைவரும்: தமிழ்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
மாறன்: தலைச்சங்கத்தை நிறுவிய காய்சின வழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கத்தை சிறப்புற நிர்வாகித்து வந்தார்கள்.
பொற்கொடி: தலைச்சங்கம் குமரிக் கண்டத்தில், குமரி ஆற்றங்கரையில் இருந்த தென்மதுரையில் செயல்பட்டது.
மாறன்: இக்காலத்தில் தமிழர்கள் தெற்கில் குமரிக்கண்டம் முழுவதுமாகவும், தற்போதைய இந்திய, பாக்கித்தான், ஆப்கானித்தான் வரை மேரு மலையெனும் இமய மலையையும் தாண்டி பரவி வாழ்ந்தார்கள்.
பொற்கொடி: அதற்கான தொல்லியல் அடையாளங்கள் இப்பகுதி முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. தலைச்சங்க காலத்தில் தமிழர்கள் நாகரிகத்தில் மேன்மையுற்று பரவி வாழ்ந்ததன் எச்சங்கள் தான் அரப்பா, முகஞ்சதரா நாகரிகங்கள்.
மாறன்: தலைச்சங்கத்தில் 4449 புலவர்கள் அங்கம் வகித்திருந்தனர்.
அவர்களில் முதன்மையானோர் இறையனார், குன்றம் எறிந்த குமரவேள், நிதியின் கிழவர், முரிஞ்சியூர் முடிநாகராயர், அகத்தியர்.
பொற்கொடி: அகத்தியர் சங்கத்திற்கு தலைமை வகித்தார்.
மாறன்: தலைச்சங்கத்தின் முக்கிய நூல்கள் அகத்தியம், பெரும் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகியனவாகும். முதற்சங்கத்தின் பெரும்பாலான நூல்கள் அழிந்தன சில நூல்கள் மட்டுமே எஞ்சின.
அறிவு: எப்படி அப்பா அந்நூல்கள் அழிந்தன?
பொற்கொடி: கீ.மு. 9600- 9500 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஏற்பட்ட கடற்கோளான ஆதி ஊழியில் தலைச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென்மதுரையும் அழிந்து கடலினுள் புதைந்தது.
தமிழ்: என்னது! கடலுக்குள் புதைந்ததா?
பொற்கொடி: ஆம். அக்காலத்தில் ஈழம் கூட பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பஃறுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என இருந்ததை அடியார்க்கு நல்லார் எனும் புலவர் கூறியிருக்கிறார்.
மாறன்: திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பஃறுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்கு உணவாயின.
பொற்கொடி: தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து பெருங்கடலாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் பெருமளவில் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த குமரிக்கண்டத்தின் பெரும்பகுதியும் அழிவுற்றது.
மாறன்: தென்பாண்டி நாட்டின் ஒரு பகுதியான நக்கவாரத்தீவு (நிக்கோபர்) மட்டும் அழியாமல் இன்றும் இருக்கிறது.
அறிவு: ஐயோ! பெரும் துயரம்!
தமிழ்: முதல்சங்கம் கடலுக்குள் மூழ்கியதால் இரண்டாவது சங்கம் எங்கே நடந்தது அப்பா?
மாறன்: இடைச்சங்கமெனும் இரண்டாம் சங்கம் கடல் கொண்டது போக மீதி இருந்த பாண்டிய நாட்டின் இரண்டாவது தலைநகரமான கபாடபுரத்தில் நடந்தது.
பொற்கொடி: கபாடபுரம் பொருநை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது.
பொருநை எனும் தாமிரபரணி அன்று குமரிக்கண்டத்திலும் பாய்ந்தோடியது
மாறன்: இடைச்சங்க காலத்தில் தான் வைகையாற்று நாகரிகமும் சிறந்து விளங்கியது.
பொற்கொடி: கீழடியில் அகழ்ந்தெடுத்த பொருட்களும் இடைச்சங்க காலத்தை சேர்ந்தவையே.
மாறன்: இடைச்சங்கத்தை நிறுவி செயல்படுத்தியவர்கள், வெண் தேர்ச் செழியன் முதல் முதலாம் முட்டதுத்திருமாறன் ஈறாக எழுபத்தொன்பது பாண்டிய மன்னர்கள்.
பொற்கொடி: 3700 புலவர்கள் இருந்தார்கள்.
மாறன்: தலைச்சங்க கால இலக்கண நூல்கள் முழுமையாக கிடைக்கப்பெறாமையால், வழிவழியாக வந்த இலக்கணங்களை தொகுத்து இடைச்சங்க தொடக்க காலத்தில் தொல்காப்பியரால்,
தொல்காப்பியம் இயற்றப்பட்டது.
அறிவு: இடைச் சங்க தொடக்கத்தில் இயற்றப்பட்டதெனில் தொல்காப்பியம் ஒன்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதா?
பொற்கொடி: ஆம். தமிழ் மொழிக்கான அனைத்து இலக்கணங்களையும் உள்ளடக்கிய ஒரே நூல் தொல்காப்பியம். தொல்காப்பிய இலக்கணங்கள் ஒன்பதினாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன.
அறிவு: வேறு இலக்கண நூல்கள் ஏதும் படைக்கப்படவில்லையா?
மாறன்: அகத்தியம், ஐந்திரம் முதலான வேறு இலக்கண நூல்களும் தலைச்சங்க, இடைச்சங்க காலத்தில் படைக்கப்பட்டன. தலைச்சங்க இறுதியில் முந்தைய நூல்களை ஆழிப்பேரலையில் இழந்துவிட்டோம்.
பொற்கொடி: இடைச்சங்க இறுதியில் தொல்காப்பியம் தவிர மற்ற நூல்களனைத்தையும் மீண்டும் ஆழிப்பேரலையில் தொலைத்துவிட்டோம்.
தமிழ்: மீண்டும் ஆழிப்பேரலையா?
பொற்கொடி: மீண்டும் கடற்கோளால் பொங்கிய புனலின், ஆழிப்பேரலையில், இடைச்சங்கம் முடிவுக்கு வந்தது. தொல்காப்பியம் தவிர்த்து ஏனைய நூல்களும் அழிந்துவிட்டன.
அறிவு: கபாடபுரமும் அழிந்துவிட்டதா?
மாறன்: கபாடபுரம் மட்டுமல்ல, சிறுசிறு பகுதிகளைத் தவிர குமரிக்கண்டம் முழுவது கடலுக்குள் மூழ்கிப்போனது.
பொற்கொடி: அச்சிறு பகுதிகள் தான், இன்றுஅந்தமான் தீவாகவும், இலங்கை, மாலைத்தீவுகள், மடகாசுகர், ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகளாகவும் உள்ளன.
தமிழ்: இலங்கை நம்முடைய நிலமா?
மாறன்: ஆம். இலங்கை முழுவதும் நமது மூத்தையர்களின் நிலத்தின் சிறுபகுதி. ம்ம்ம்….
வந்தவரையெல்லாம் வாழவும், ஆளவும் விட்டதால் இன்று அந்நாட்டில் இரண்டாம் குடிகளாகிவிட்டோம்.
பொற்கொடி: அந்நிலை மாறத்தானே தலைவர் தனித் தமிழீழ சோசலிச குடியரசை நிறுவினார். தமிழீழ நாட்டை கட்டியமைத்தார்.
மாறன்: பன்னாட்டுச் சதியோடு ஈழத்தில் நம்மினம் அழிக்கப்பட்டது. இன்றும் ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் அறவழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொற்கொடி: ஈழத்தின் விடுதலைக்கான முன்னெடுப்பு களையும் நாம் தமிழர் உறவுகளும், பெரியப்பா சீமானும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்: ஈழம் எங்கள் இனத்தின் தேசம்!
அறிவு: அடைந்தே தீருவோம், அது எங்கள் சுவாசம்.
தமிழ்: அப்பா! மூன்றாம் தமிழ்ச்சங்கம் எங்கு அமைக்கப் பட்டது?
மாறன்: கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்கமும் சேர்ந்தே அழிவுற்றதல்லவா. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய முட்டத்துத்திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் ஒரு நகரை உருவாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான்.
பொற்கொடி: முந்தைய தமிழ்ச்சங்கங்கள் கடல் கோள்களால் அழிந்து அவதியுற்றதால், இச்சங்கத்தை நிறுவிட சித்தர் ஒருவர் இடத்தை தேர்ந்தெடுத்து கொடுத்து வரைபடம் அளித்து அதன் வண்ணம், முட்டத்துத்திருமாறன் மன்னன் நகரை நிறுவி நாட்டினான் எனவும் கூறுகிறார்கள்.
மாறன்: கோயில்கள், குளங்கள், அரண்மனைகள், வீதிகள், தெருக்கள் என திட்டமிட்டு வைகை ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்ட கூடல் நகரம் தான் இன்றைய மதுரை மாநகரம்.
அறிவு: புதிதாக உருவாக்கப்பட்ட கூடல் நகரில் தான் தமிழ்ச்சங்கம் செயல்பட்டதா?
பொற்கொடி: ஆமாமடா செல்லங்களே. கடைச்சங்கமெனும் மூன்றாம் தமிழ்ச் சங்கம் கூடல், நான்மாடக் கூடல், தென்மதுரை, மதுரை என்றெல்லாம் அழைக்கப்படும் புதிய நகரில் தான் செயல்பட்டது.
மாறன்: கடைச்சங்கத்தை பாண்டிய மன்னன் மூன்றாம் முட்டத்துத்திருமாறன் எனும் மன்னனால் நிறுவப்பட்டு இரண்டாம் உக்கிரப் பெருவழுதி வரை நாற்பத்தொன்பது மன்னர்கள் நடத்திவந்தனர்.
பொற்கொடி: நானூற்று நாற்பத்து நான்கு புலவர்கள் வரை கடைச்சங்கத்தில் இருந்தனர்.
அறிவு: கடைச்சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்கள் எவை? அம்மா!
பொற்கொடி: திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை,பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், குறுந்தொகை, நெடுந்தொகை, குறுந்தொகை நானூறு, நற்றினை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலி பரிபாடல், குத்து, வரி, சிற்றிசை, பேரிசை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான நூல்கள் இயற்றப்பட்டன.
தமிழ்: திருக்குறள் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்ட நூலா? அம்மா!
பொற்கொடி: ஆமாட கண்ணு, திருவள்ளுவர், இளங்கோவடிகள் எல்லாம் இந்த காலத்தில் வாழ்ந்தவர்களே.
மீறன்: இத்தமிழ்ச்சங்கம் வழிவந்த முக்கிய பாண்டிய அரசர்கள் எழுவராவர். வடிவலம்பநின்ற பாண்டியன். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பொற்கைப் பாண்டியன், ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன், உக்கிரப்பெருவழுதி, பூதப்பாண்டியன், வரகுணப்பாண்டியன் ஆகியோர் அவ்வெழுவராவர்.
தமிழ்: அப்பா! கடைச்சங்கம் என்றால் கடைசி சங்கம் என்று தானே பொருள்?
மாறன்: ஆமாம். கி. பி. மூன்றாம் நூற்றாண்டு இறுதி வரை செயல்பட்டு பின் அழிந்துவிட்டது.
அறிவு: கடைச்சங்க காலத்திலும் ஆழிப் பேரலை வந்ததா?
மாறன்: இல்லையே, ஏன் கேட்கிறாய்?
அறிவு: கடைச்சங்கமும் கடலில் மூழ்கி அழிந்ததோ எனும் ஐயம்தான்.
பொற்கொடி: இல்லை. கடலில் மூழ்கி அழியவில்லை.
தமிழ்: அப்படியானால் கடைச்சங்கம் எப்படி அழிந்தது.
மாறன்: சிறந்து விளங்கிய கடைச் சங்கமானது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுக்குப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது தமிழை வளர்க்காது போயினர்.
அறிவு: ஏன்? என்ன காரணம்?
பொற்கொடி: தமிழினத்திற்கே உரிய கெடும்பேறான அகப்பகையெனும் தாயாதிச் சண்டைகளால் அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன.
மாறன்: களப்பிரர்களின் படையெடுப்புகளும், பல்லவர் களின் படையெடுப்புகளும் தொடர்ந்தன.
பாலிமொழி பேசுவோர்களாலும், களப்பிரர்களாலும் இச்சங்கம் அழிக்கப்பட்டு ஏராளமான தமிழ் நூல்கள் அதில் எரியூட்டப்பட்டன, அதில் தப்பியவைகளே இன்றைய பழமை கூறும் இலக்கிய இலக்கண நூல்களாகும்.
பொற்கொடி: அத்தோடு பாண்டிய நாட்டில் பன்னீராண்டு கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போனது. இச்சூழ்நிலைகளால் தமிழ் வளர்த்த முச்சங்கங்களின் மூன்றாம் சங்கமான கடைச்சங்கமும் முடிவுக்கு வந்தது.
அறிவு: முதலிரண்டு சங்கங்களை கடல் கொண்டு போனது. ஆனால், கடைச்சங்கத்தையும் காக்காமல் விட்டுவிட்டார்களே!
தமிழ்: கடைச்சங்கம் அழிந்த பின் என்னவாயிற்று அப்பா!
மாறன்: கடைச்சங்க நூல்கள் ஓரளவு அழிவுறாமல் இருந்தால், அடுத்தடுத்த தலைமுறையினர் அந்நூல்களை கற்கவும், கற்பிக்கவும், நூல்களை எழுதவும் தலைப்பட்டனர். அதனால், தமிழ் மென்மேலும் பரவி தழைத்தோங்கியது. அதன் பின்னர்..
அறிவு: அதன் பின்னர் என்ன நடந்தது.
பொற்கொடி: அதன் பின்னர், ஆரியர்கள் நுழைந்தார்கள். தமிழை சிறுகச்சிறுக அழிக்கத் துவங்கினார்கள். தமிழைப் பொருமளவுத் திருடி தமக்கென சமைத்த மொழியை உருவாக்கினார்கள். மொழிக் கலப்பை, பண்பாட்டு அழிப்பை இறையின் பெயரால் தொடர்ந்தார்கள்.
மாறன்: தமிழுடன் ஆரியக்கலப்பினால் புதுப்புது மொழிகள் உருவாகின. அம்மொழிகளை பின்பற்றி தனித்தனி இனக்குழுக்களாக பிரிந்தனர்.
பொற்கொடி: குமரிக்கண்டம் முதல் இமயம் வரை பரவி வாழ்ந்த தமிழர்கள் ஒரு குடையின் கீழ் திரண்டிருந்தால், உலகின் மாபெரும் பேரினமாக, பெருவளம் மிக்க நாடாகவும், மாபெரும் வல்லரசாகவும் திகழ்ந்திருக்கும்.
அறிவு: பெருமை மிகுந்த தமிழ் இனத்தில் பிறந்ததே நமது பெரும் பேறாகும்.
மாறன்: ஆனால், குமரிக்கண்ட அழிவினாலும், ஆரியர்களின் படையெடுப்பாலும், மொழிக்கலப்பாலும், அகப்பகையாலும் தமிழ்நாட்டளவிலும், இலங்கையில் ஈழமாகவும் தமிழர்கள் சுருங்கிப் போனார்கள்.
பொற்கொடி: பதினோராம் நூற்றாண்டிற்குப் பின் விசய நகர படையெடுப்பினால் மேலும் மொழியும் பண்பாடும் சிதைவுற்றது.
மாறன்: ஐரோப்பியர் வருகைக்குப் பின் மொழிக்கலப்புடன், பழமை வாய்ந்த நூல்கள், தொல் பொருட்களை அவரது நாட்டிற்கு கொண்டு செல்லுதல் என்று தொடர்ந்தது.
தமிழ்: அவற்றை கொண்டுபோய் என்ன செய்வார்கள்?
பொற்கொடி: நமது தொல் பொருட்களை தங்களது கலைப்பொருளாக வைத்துக் கொள்வார்கள். நமது நூல்களில் உள்ள அறிவியல், வானியல், கடலியல், கணக்கியல், மருந்தியல் முதலியவற்றை மேம்படுத்தி தமது கண்டுபிடிப்பாக இன்றும் வெளியிடுகிறார்கள்.
அறிவு: ஆமாம் அப்பா! 17ஆம் நூற்றாண்டில் இரும்பை கண்டுபிடித்தவர் கென்றி பாசுனர் என்று கூறுகிறார்கள். ஆனால் ஆயிரமாண்டுகளுக்கு முன் தஞ்சை பெருவுடையார் கோயிலை இரும்பு உளிகளால் கற்களை செதுக்கி கட்டியிருக்கிறார்களே!
பொற்கொடி: வரலாற்றை படிக்காமல், படைக்காமல் மற்றோரிடம் பறிகொடுத்த இனமாகிவிட்டோமே!
மாறன்: ஆனாலும் சில மேலை நாட்டினர் தமிழின் அருமை, சிறப்புகளை உணர்ந்து சி.யூ. போப், வீரமாமுனிவர் போன்றவர்கள் தமிழைப்படித்து, தமிழில் படைத்து, தமிழை வளர்த்து தமிழுக்கு தொண்டு செய்திருக்கிறார்கள்.
அறிவு: தேம்பாவணி நூலை எழுதியவர் வீரமாமுனிவர் தானே?
பொற்கொடி: ஆம். இவர்கள் காலத்திற்குப் பின்னர் தமிழ் சிறிது எழுச்சி கொண்டது. அச்சு இயந்திரம், காகிதம் பயன்பாட்டிற்கு வந்ததும், ஓலைச்சுவடிகளை தேடி அச்சில் பதிப்பிற்கும் கலை வளர்ந்தது.
அறிவு: அச்சுக்கலை வந்த பின், பழமையான ஓலைச்சுவடி களை எல்லாம் புத்தகமாக பதிப்பித்துவிட்டார்களா?
மாறன்: இல்லை. ஐம்பது புத்தகங்கள் வரை தான் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
பொற்கொடி: ஓலைச்சுவடி பற்றிய வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். அது தனிப் பெருங்கதை. பின்னொரு நாள் பேசுவோம்.
தமிழ்: மூன்றாம் சங்கத்திற்கு பின்னர் தமிழ் வளர்க்க சங்கம் அமைக்கவில்லையா?
மாறன்: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டது.
தமிழ்: எங்கே அமைக்கப்பட்டது அப்பா!
மாறன்: அதே மதுரையில் தான் அமைக்கப்பட்டது.
அறிவு: நான்காம் தமிழ்ச்சங்கத்தை யார் நிறுவினார்கள் அப்பா!

மாறன்: முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களும் அழிவுற்ற நிலையில், கடைச்சங்க பாண்டி மன்னன் உக்கிர பெருவழுதிக்குப் பின் கி.பி. 250ல் கடைச்சங்கம் முழுமையாய்ச் செயல் இழந்து விட்டது. பண்டைய நாளில் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சங்கத்திற்கும் இருந்து வந்த ஏற்றத்தையும், பின்நாளில் தமிழுக்கு ஏற்பட்ட தாழ்வையும் எண்ணி வருந்திய வள்ளல் பொன். பாண்டித்துரை அவர்கள், மீண்டும் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் நிலை ஏற்றம் பெற்று, பண்டைய நிலைக்கு உயர வேண்டும் என்னும் பேரார்வப் பெருக்கால் சுமார் 1651 ஆண்டுகளுக்குப் பின் 1901 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் அறிஞர்கள் முன்னிலையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தனர்.
பொற்கொடி: நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன்.பாண்டித்துரை அவர்களால் நிறுவப்பட்டது. அதே நன்னாளில்
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை,
2. பாண்டியன் புத்தகசாலை
3. நூலாராய்ச்சி சாலை என்பனவும் தொடங்கப்பெற்றன.
தமிழ்: நான்காம் சங்கத்திலும் புலவர்கள் இருந்தார்களா அப்பா!
மாறன்: புலவர்கள் திரு. உ.வே.சா முதல் 251 பேர்கள் இருந்தார்கள்.
அறிவு: இயற்றப்பட்ட நூல்கள்?
பொற்கொடி: தமிழ் இலக்கண நூலான நன்னூல், வீரசோழியம் மேலும் பல நூல்கள் இயற்றப்பட்டன.
அறிவு: ஐயா வள்ளல் பொன். பாண்டித்துரை அவர்களது வரலாற்றை கூறுங்கள்?
மாறன்: அன்று அது இராமநாதபுரம், பாலவநத்தம் சமீன் ஆக இருந்தது.
அந்த சமீன் குடும்பத்தில் 1867 ஆம் ஆண்டு மார்ச் 21ல் வள்ளல் பொன். பாண்டித்துரை அவர்கள் பிறந்தார்.
பொற்கொடி: தமிழார்ந்த அறிஞராகி, பல நூல்களை இயற்றியுள்ளார். பழந்தமிழ் நூல்களை பதிப்பிட்டும் பதிப்பிப்பதற்கு உதவியாகவும் இருந்திருக்கிறார்.
மாறன்: சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார்.
பொற்கொடி: மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தர்களும் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவருவதை எண்ணி வருந்தினார்.
மாறன்: இந்நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட அவர், தனது திட்டத்தை 1901-ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார்.
பொற்கொடி: அம் மாநாட்டில் நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுச் செயல்படத் தொடங்கியது.
மாறன்:தொடக்க விழாவிற்கு மன்னர் பாஸ்கர சேதுபதி வந்திருந்தார்.
உ.வே. சாமிநாதையர், பரிதிமாற்கலைஞர்,மு.சண்முகம் பிள்ளை போன்றவர்கள் விழாவிற்கு வந்திருந்தனர்.
பொற்கொடி: மதுரை தமிழ்ச்சங்கத் தொடக்க நாளில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்க் கல்லூரி ஒன்றை தொடங்குதல்.
2 தமிழ் ஏடுகளை அச்சிட்டு பயன்படுமாறு தொகுப்பது.
3. வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.
4. வடமொழி ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தல்.
5. தமிழ்க் கல்வி பற்றிய செந்தமிழ் இதழ் வெளியிடுதல்.
6 தமிழில் தேர்வு நடத்தி பட்டமும் பரிசும் வழங்குதல்.
7. தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.
8 தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.
9. வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்.
மாறன்: நான்காம் தமிழ்ச்சங்கம் ஏழு துணை அமைப்புகளை நிறுவியது.
1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை. (கல்லூரி)
2 பாண்டியன் புத்தகச்சாலை. (நூல்நிலையம்)
3. தமிழ்ச் சங்க முத்திராசாலை. (நூல், பத்திரிகை வெளியிடுவதற்கான அச்சகம்)
4. கல்விக் கழகம். (வித்துவான் கூட்டம்)
5. தமிழில் தேர்வுகள் நடத்தும் புலவர் கழகம்.2
7. செந்தமிழ் இதழ்.
அறிவு: செந்தமிழ் இதழ் எதற்காக?
பொற்கொடி: மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட செந்தமிழ் இதழ் தமிழாய்வில் முன்னோடி இதழாகக் கருதப்படுகிறது. அதன்
முதன்மைப்பணியாக விளங்கியது.
செந்தமிழ் இலக்கிய ஆய்விதழின்
வெளியீடு. அதில்தான் தமிழாய்வின் பல களங்கள் முதன்முதலாக தொடங்கப்பட்டன.
மாறன்: இலக்கியப் படைப்புகளின் கால ஆராய்ச்சி, பாடபேத ஆராய்ச்சி ஆகியவை நிகழ்ந்தன.
நூல்பதிப்பு, கல்வெட்டு மற்றும் சாசனங்களை ஒப்பிட்டு ஆராய்வது முதலியவற்றுக்கான நெறிகள் உருவாகிவந்தன.
தமிழ்: பாண்டியன் புத்தகசாலை?
மாறன்: பாண்டியன் புத்தகசாலை அரிய நூல்களை ஏடுகளில் இருந்து சேகரித்து தொகுத்து அட்டவணையிட்டது.
பொற்கொடி: மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் புலவர்தேர்வு சிறந்த தமிழாசிரியர்களை உருவாக்கியது.
மாறன்: இத்தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராக அவரே பொறுப்பேற்றுச் சங்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார்.
பொற்கொடி: தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுநர்களை அழைத்துச் சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.
மாறன்: தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் அவரிடம் இருந்தது, இதற்குச் சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி, இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன.
பொற்கொடி: தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும் வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த அவர், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
மாறன்: தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், வள்ளல் பொன். பாண்டித்துரை அவர்கள்,
1911-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாள் உயிர் துறந்ததை எண்ணித் தமிழ் உலகம் வருந்தியது.
அறிவு: சங்கம் என்னவானது?
பொற்கொடி: அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது.
அறிவு: பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைந்த சங்கத்தைப் பற்றி முச்சங்கம் என சிறிதளவேனும் நினைவில் வைத்திருக்கிறோம்.
நூறாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்க வரலாறு, நிறுவனர், புலவர்கள் வரலாறு நமக்குத் தெரியவில்லையே, கற்பிக்கப்படவில்லையே ஏன்?
பொற்கொடி: நாட்டு விடுதலைக்கு முன் ஆரிய வழித்தோன்றல்களும், தமிழரல்லாதோரும் சென்னை மாகாண சபை அரசியலில் நுழைந்தும், அவர்களுக்கு சாதகமாக தமிழ்க்கட்சிகளை வளைத்தும் அவர்நலம் பேணி, தமிழ், தமிழர் நலத்தை உறவாடிக் கெடுத்தனர்.
அறிவு: நாட்டு விடுதலைக்குப் பின் தமிழ் வளர என்ன செய்தார்கள்?
மாறன்: விடுதலைக்குப் பின் இந்திய ஒன்றியமாக மாற்றப்பட்டதாலும், தமிழ்த் தலைவர்கள் தேசிய நீரோட்டத் தில் கரைந்ததாலும், மாகாணப் பிரிப்பு, அதற்கான போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் என தொடர்ந்ததால் தமிழ் வளர்ச்சி பெருமளவில் ஏற்படவில்லை.
பொற்கொடி: இந்தி எதிர்ப்பு போராட்ட ஈகத்தை, எழுச்சியை பயன்படுத்தி, ஆரிய எதிர்ப்பு மாயை கொண்ட திராவிட கட்சிகளும், ஊழலை மலினமாக்கி, அரசியலை சாக்கடையாக்கி, திரைப்பட போதை தந்து, மடையென மதுவைத் திறந்து வைத்ததில், தம் நலத்தையும், தமிழர் வளத்தையும், நிலத்தையும், ஆட்சி அதிகாரத்தையும் பறிகொடுத்து தமிழர் மயங்கிக் கிடக்கின்றனர்.
ம்ம்ம்… இதில் தமிழைப்பற்றி சிந்திக்க நேரமேது. வரலாற்றைப் படிக்க நேரமேது!
தமிழ்: ஐயோ! என்ன கொடுமையிது!
மாறன்: கடல் தின்றது போக, தீ தின்றது போக, நீர் தின்றது போக, கரையான் தின்றது போக, மண் தின்றது போக, மதங்கள் தீய்த்தது போக, ஆரியம் திருடியது போக, திராவிடமாக திரிந்தது போக, தமிங்கிலமாக மருவி நிற்கும் தமிழை, இன்று இந்தியெனும் பேரரக்கன் விழுங்கத்துடிக்கிறான்.
அறிவு: இத்தனை வெட்டுக்களையும், புறமுதுகில் குத்துவோரையும் தாங்கி தமிழன்னை தத்தளிக்கிறாளே!
தமிழ்: இதற்கு விடிவுதான் என்ன?
பொற்கொடி: ஆட்சி அதிகாரம் நல் தமிழர் வசம் வரவேண்டும். தமிழையும், தமிழர்களையும், நிலங்களையும், வளங்களையும் மீட்டெடுக்க வேண்டும்.
மாறன்: அதிகாரம் வரும் வரை தமிழையும் தமிழரையும் காத்து நிற்க வேண்டும்.
அறிவு: அதுவரை தமிழை யார் காப்பர்?
பொற்கொடி: நாம் தமிழர் கட்சி, உங்கள் பெரியப்பா செந்தமிழன் சீமான் அவர்கள் வழிகாட்டுதலுடன், தமிழை மீட்டெடுக்க வலுவான அடித்தளம் அமைத்து, செயல்பட்டுவருகிறது தமிழ் மீட்சிப் பாசறை.
மாறன்: நாம் தமிழர் எப்போதும் தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் செயல்படும் கட்சி.
பொற்கொடி: நாம் தமிழர் ஆட்சியில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பண்பாட்டுத் தலைநகரமாக மாற்றி, உலக மொழிகளின் தாய்மொழி தமிழ் மேலும் மேலும் சிறந்தோங்க வழிவகைகளை செய்யும்.
தமிழ்ச்சங்கத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும்.
மாறன்: நான்காம் தமிழ்சங்கம் அமைத்த வள்ளல் பொன். பாண்டித்துரை அவர்களின் பிறந்தநாள் மார்ச் 21. அந்நாளில் அவரை போற்றி வணங்கி, நாமும் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டு தாய் மொழியை மீட்க உறுதியேற்போம்.
அறிவு: தமிழ்த்தாய் வாழ்க!
தமிழ்: தலைவர் பிரபாகரன் வாழ்க!
அனைவரும்: நாம் தமிழர் வெல்க!
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.